“அதிமுகவை தொட்டால் விஜய் கெட்டார்.. வரி ஏய்ப்பு செய்யும் நீ ஊழலை பற்றி பேசலாமா?” முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்..!

vijay jayakumar

தவெக கூட்டங்களில் திமுகவை மட்டுமே விமர்சித்து வந்த விஜய் தற்போது அதிமுகவை கடுமையாக விமர்சிக்க தொடங்கி உள்ளார்.. சில நாட்களுக்கு முன் நடந்த தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர் அதிமுகவை ஊழல் சக்தி என்றும் பாஜகவின் அடிமை என்றும் விமர்சித்தார்.. விஜய்யின் இந்த பேச்சு அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது..


எனவே அதிமுகவும் விஜய்யை கடுமையாக விமர்சிக்க தொடங்கியது.. விஜய்யை பனையூர் பண்ணையார் என்றும், விஜய் பேசுவதெல்லாம் குப்பை தான் என்றும் சாடியிருந்தது.. மேலும் சட்டத்திற்கு விரோதமாக, தொடர்ந்து ப்ளாக்கில் டிக்கெட் விற்று அதன் மூலம் பல கோடிகள் கண்ட நடிகர் விஜய் ஆகிய நீங்கள் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி என்றும் அதிமுக விமர்சித்திருந்தது.

இந்த சூழலில் நேற்று நடைபெற்ற தவெக 3-ம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய விஜய் அதிமுகவை ஊழல் சக்தி என்றும் விமர்சித்தார்.. விஜய்யின் இந்த பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், அதிமுகவை ஊழல் சக்தி என பேசிய தவெக தலைவர் விஜய்க்கு முன்னாள் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.. நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் “ இப்போது விஜய் புதிதாக கட்சி தொடங்கி உள்ளார்.. அவர்களுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.. பொதுவாக ஆபத்தில் இருப்பவர்கள் தான் விசில் அடிப்பார்கள்.

தங்களை காப்பாற்ற வேண்டும் என்று  நினைப்பவர்கள் விசில் அடிப்பார்கள்.. அது கூட தெரியாமல் பேசி வருகின்றனர்.. விஜய் கருப்பு பணமாக எவ்வளவு சம்பளம் பெற்றார்? வெள்ளையாக எவ்வளவு பெற்றார்? விஜய் மீது வருமான வரி ஏய்ப்பு வழக்கு இன்றும் நிலுவையில் உள்ளது.. வரி ஏய்ப்பு செய்வதெல்லாம் ஊழல் இல்லையாம்.. அதிமுகவை தொட்டால் விஜய் கெட்டார்.. விஜய் போட்டியிலேயே இல்லை.. திமுகவுக்கும் அதிமுகவுக்கும் தான் போட்டி.. ” என்று எச்சரித்தார்..

எம்.ஜி.ஆருடன் தன்னை ஒப்பிட்டு விஜய் பேசியதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.. எம்.ஜி.ஆர் தேர்தலை மனதில் வைத்து உதவி செய்தால் அது சுயநலம்.. ஆனால் எம்.ஜி.ஆர் விளம்பரம் இல்லாமல் சுயநலமில்லாமல் உதவி செய்தார்.. அவர் கட்சி தொடங்கிய உடன் உதவி செய்யவில்லை.. தனது உயிர் உள்ளவரை அதிமுகவில் தான் நீடிக்க போவதாகவும் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Read More : Flash : குட்நியூஸ்..! இன்று வெள்ளி விலை ரூ.20,000 சரிவு..! ஆனால் தங்கம் விலை மீண்டும் உயர்வு..!

RUPA

Next Post

'தன்னம்பிக்கை எல்லாவற்றையும் சாத்தியமாக்கும்': இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடி..!

Tue Feb 3 , 2026
சுய நம்பிக்கைதான் எல்லாவற்றையும் சாத்தியமாக்கும் சக்தி என்றும், அது ஒரு வளர்ந்த பாரதம் என்ற கனவை நனவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்ட ஒரு நாள் கழித்து அவரது இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியப் பொருட்களுக்கான பரஸ்பர வரிகளை தற்போதைய 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்க வாஷிங்டன் ஒப்புக்கொண்டது. […]
pm modi

You May Like