தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. முக்கிய அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன.. அதன்படி தமிழக பாஜக சமீபத்தில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு 72 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.. அதன்படி 6 தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டர்..
இந்த நிலையில் கட்சி தேர்தல் பொறுப்பில் இருந்து விலக விரும்புவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.. தந்தையின் உடல்நிலையை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பொறுப்பில் இருந்து விலகுவதாக அவர் கூறியுள்ளார்.. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் எனது முடிவை தெரிவித்துள்ளேன்..
அதே நேரத்தில் பாஜக தலைமை அடுத்து என்ன வேலை செய்ய வேண்டும், கட்சிக்கு என்ன வேலை செய்ய வேண்டும், கூட்டணிக்கு என்ன வேலை செய்ய வேண்டும் என்று கட்சி சொல்கிறதோ அதை செய்வேன்.. இப்போதைய சூழலில் அதிகம் பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது.. அதையும் கட்சி தலைமையிடம் சொன்னேன் அதை புரிந்துகொண்டார்.. எனக்கு ஒதுக்கு பொறுப்புகளுக்கு வேறொரு தலைவர் வருவார்.. வேறு வேறு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்..” என்று கூறினார்.. தேர்தலில் போட்டியிடுது குறித்து காலமமும், நேரமும் முடிவு செய்யும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்..



