தரவுப் பகிர்வு என்ற பெயரில் குடிமக்களின் தனியுரிமை உரிமையை சமரசம் செய்ய முடியாது என்று வாட்ஸ்அப் மற்றும் அதன் தாய் நிறுவனமான மெட்டாவிடம் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. வாட்ஸ்அப் மற்றும் மெட்டா தாக்கல் செய்த மனுக்களை விசாரித்தபோது உச்ச நீதிமன்றம் இந்த கருத்துகளை தெரிவித்தது…
விசாரணையின் போது, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தை (MeitY) இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒரு தரப்பாகச் சேர்த்தது. இந்த விவகாரத்தில் பிப்ரவரி 9-ஆம் தேதி இடைக்கால உத்தரவுகளைப் பிறப்பிப்பதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது..
தொழில்நுட்ப ஜாம்பவான்களின் தனியுரிமை விதிமுறைகள் மிகவும் தந்திரமாக வடிவமைக்கப்பட்டுள்ளன, இதனால் சாதாரண குடிமக்கள் அவற்றை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. “விலகிக்கொள்ளும் வசதி எங்கே இருக்கிறது?” என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
சமமற்ற ஒப்பந்தங்கள் சம்பந்தப்பட்ட சூழ்நிலைகளில் நுகர்வோர் தரவைப் பகிர தொழில்நுட்ப நிறுவனங்களை அனுமதிக்க மாட்டோம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது..



