கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். குடும்ப தலைவிகளுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கும் நோக்கத்தோடு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் மாதம் ரூ.1000 குடும்ப தலைவிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 13-ம் தேதி மகளிர் உரிமை திட்ட பயனாளிகளுக்கு ரூ.5,000 வரவு வைக்கப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.. மேலும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3,000 + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000 என மொத்தம் ரூ.5000 வரவு வைக்கப்பட்டதாக முதல்வர் தெரிவித்தார்… மேலும் திராவிட 2.0 ஆட்சியில் மகளிர் உரிமை தொகை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.. அதே போல் திமுக அமைச்சர்கள், மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் முதல்வரின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.. அதே நேரத்தில் தோல்வி பயம் காரணமாகவே முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன..
இனி ஆண்டு தோறும் கோடைகால சிறப்பு தொகையாக ரூ.2,000 வழங்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.. சட்டப்பேரவையில் பேசிய அவர் “ கோடைக் காலம் வர உள்ளதால் வெயில் காரணமாக மருந்து செலவு எல்லாம் வரும்.. அதற்காக ரூ.2,000 கொடுத்தது எங்கள் ஆட்சியின் கொள்கை முடிவு.. எனவே இனி ஒவ்வொரு ஆண்டும், மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகளுக்கு கோடைக் கால சிறப்பு நிதியாக ரூ.2000 வழங்கப்படும் ” என்று தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து கேள்விக்கு அமைச்சர் இந்த பதிலை தெரிவித்தார்..
Read More : அரசியல் பகைவர்களின் கனவில் மண் விழுந்தது..! திமுக – தேமுதிக கூட்டணி குறித்து திருமாவளவன் மகிழ்ச்சி..!
.



