“MGR, ஜெயலலிதா ஆசியுடன் மீண்டும் ஸ்டாலினே முதல்வராக வரவேண்டும்..” சட்டப்பேரவையில் புகழ்ந்து தள்ளிய அதிமுக MLA..!

stalin iyappan admk mla

2021 – 2026 திமுக ஆட்சிக்காலத்தின் கடைசி சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது.. இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, முதல்வர் மு.க ஸ்டாலின் பதிலுரை ஆற்றினார்.. எனினும் இன்றைய கூட்டத்தொடரை அதிமுக புறக்கணித்துவிட்டது..


இந்த நிலையில் வரும் தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் மு.க ஸ்டாலினே முதல்வராக வர வேண்டும் என்று ஓபிஎஸ் ஆதரவு ஐயப்பன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. சட்டப்பேரவையில் பேசிய அவர் “ முதல்வர் ரூ.5000 கொடுத்தால், 5000 கொடுத்து விட்டார் என்று கூப்பாடு போட்டனர்.. அப்படி கூப்பாடு போட்ட யாரும் இன்று அவைக்கே வரவில்லை.. முதல்வர் ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை கொண்டுவந்தார்.. ஆரம்ப பள்ளிகளுக்கு வரும் பிஞ்சு குழந்தைகளுக்கு ஒரு தாயாக இருந்து காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தார்..

இந்த காலை உணவு திட்டத்தை கொண்டு வந்த முதல்வரை ஏன் அதிமுகவினர் இந்த திட்டத்தை பாராட்ட அதிமுகவினருக்கு மனமில்லை.. எம்.ஜி.ஆர் எப்படி சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தாரோ அதே போல் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கொண்டு வந்த காலை உணவு திட்டத்தை தமிழ் சமுதாயம் இருக்கும் வரை பாராட்டும். வரும் தேர்தலிலும் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராக வர வேண்டும் என்று புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் ஆசியோடும், புரட்சி தலைவி அம்மாவின் ஆசியோடும் மீண்டும் மீண்டும் அவர் முதல்வராக வர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.. எங்கள் அண்ணன் ஓபிஎஸ் அவர்களின் வாழ்த்துகளோ முதல்வருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்..

முன்னதாக,  முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.. அப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார்.. இன்றுடன் சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவடைய உள்ள நிலையில் இன்று ஓபிஎஸ் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. எனினும் முதலமைச்சரை ஓபிஎஸ்-ஐ சந்தித்ததற்கான காரணம் வெளியாகவில்லை..

திமுக உடன் இணைந்து ஓபிஎஸ் தேர்தலை எதிர்கொள்ளப் போகிறாரா? அல்லது தனிக்கட்சியை தொடங்கப் போகிறாரா? அல்லது தவெக உடன் கூட்டணி அமைப்பாரா? என்பது தெரியவில்லை.. தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படப் போகும் மாற்றத்திற்கான முன்னோட்டமாக இந்த சந்திப்பு நடந்ததா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் ஓபிஎஸ் உடன் இருந்தவர்களில் மீதமிருந்த ஒரே ஒரு எம்.எல்.ஏவும் இன்று முதல்வரை பாராட்டி பேசி உள்ளார்.. அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஐயப்பன் முதல்வரை பாராட்டி பேசி உள்ளார்.. இதனால் ஓபிஎஸ் திமுக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திப்பாரா என்ற சந்தேகம் பெற்றுள்ளது.

Read More : Breaking : திடீரென முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்..! திமுக உடன் கூட்டணியா

RUPA

Next Post

நீங்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்கிறீங்களா..? IRCTC புதிய விதிகள் பற்றி தெரிஞ்சுக்கோங்க.!

Fri Feb 20 , 2026
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) இப்போது ஆன்லைனில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்பவர்களுக்கு ஆதார் சரிபார்ப்பை கட்டாயமாக்கியுள்ளது. புதிய விதிகளின்படி, பயனர்கள் பிளாட்ஃபார்மில் முன்பதிவு செய்வதற்கு முன்பு ஆதார் அங்கீகாரம் மூலம் தங்கள் அடையாளத்தை சரிபார்க்க வேண்டும். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கையின்படி, உண்மையான பயணிகளுக்கு பயனளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தட்கல் டிக்கெட்டுகள் மற்றும் முன்பண முன்பதிவு காலம் (ARP) டிக்கெட்டுகள் […]
irctc shares in focus as indian railways to hike passenger fares from july 1 1

You May Like