உங்களுக்கும் இது நடந்துருக்கா..? படம் பார்ப்பதை விட தேடுவதற்கே அதிக நேரம் செலவிடும் ஜோடிகள்..!! கடைசியில் நடப்பது என்னவோ இதுதான்..!!

OTT Movie 2026

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் தியேட்டர்களுக்குச் செல்வதை விட, வீட்டிலிருந்தபடியே OTT தளங்களில் படம் பார்ப்பது ஒரு முக்கியப் பொழுதுபோக்காக மாறிவிட்டது. ஆனால், ‘என்ன படம் பார்க்கலாம்?’ என்று ஒரு நல்ல சினிமாவையோ அல்லது தொடரையோ தேர்ந்தெடுப்பது என்பது, ஒரு காதலுக்கு வைக்கப்படும் மிகப்பெரிய அக்னி பரீட்சையாக உருவெடுத்துள்ளது. இருவருக்கும் பிடித்தமான ஒரு பொதுவான படத்தை தேர்ந்தெடுப்பதற்குள் நடக்கும் விவாதங்கள், பல நேரங்களில் அந்தப் பொழுதுபோக்கையே சோர்வடைய செய்துவிடுகின்றன.


சமீபத்திய உறவுமுறை புள்ளி விவரங்களின் படி, பெரும்பாலான ஜோடிகள் தாங்கள் பார்க்க வேண்டிய படத்தைத் தேடுவதற்காக மட்டுமே சராசரியாக 45 நிமிடங்களை செலவிடுகின்றனர். துரதிர்ஷ்டவசமாக, ஒரு சிறந்த படத்தை கண்டுபிடிப்பதற்குள் அவர்களது கைகளில் இருக்கும் பாப்கார்ன் தீர்ந்து போவதும், அந்தச் சலிப்பில் யாராவது ஒருவர் தூங்கியே போவதும் வாடிக்கையாகிவிட்டது. படம் பார்க்கும் நேரத்தை விட, அதை தேடுவதற்கே அதிக நேரம் ஆகுவதுதான் தற்போதைய OTT கலாச்சாரத்தின் விசித்திரமான உண்மையாக இருக்கிறது.

சுமார் முக்கால் மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, புதிய படங்கள் எதையும் தேர்ந்தெடுக்க முடியாமல் தவிக்கும் ஜோடிகள் இறுதியாக எடுக்கும் முடிவுதான் மிகவும் சுவாரஸ்யமானது. சுமார் 90 சதவீத ஜோடிகள், ஏற்கனவே 10 முறைக்கு மேல் பார்த்த ஒரு பழைய தொடரையோ அல்லது சினிமாவையோ மீண்டும் பார்க்கத் தொடங்குகின்றனராம். “புதிதாக ஏதேனும் முயற்சி செய்து நேரத்தை வீணாக்குவதை விட, தெரிந்த பழைய கதையையே பார்த்துத் திருப்தி அடையலாம்” என்ற மனநிலைக்கு ஜோடிகள் தள்ளப்படுவதையே இந்தப் புள்ளிவிவரம் சுட்டிக்காட்டுகிறது.

ஏன் இந்த தடுமாற்றம்..?

ஆயிரக்கணக்கான தேர்வுகள் நம் கண்முன்னே கொட்டிக் கிடப்பதால்தான், ஒரு முடிவை எடுப்பதில் இத்தனை குழப்பங்கள் ஏற்படுகின்றன. படம் பார்ப்பது என்பது ஒரு நிம்மதியான அனுபவமாக இருக்க வேண்டும். ஆனால், அது ஒரு தேடல் வேட்டையாக மாறிப் போவது காதலர்களிடையே ஒரு வேடிக்கையான அதே சமயம் எரிச்சலூட்டும் சவாலாகவே நீடிக்கிறது.

Read More : இதய நோயாளிகளே..!! லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை நல்லதல்ல..!! எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்..!!

CHELLA

Next Post

ஒரே ஒரு முறை மட்டும்தான் உடலுறவு பண்ணோம்..!! ஆண்ட்டியை கர்ப்பமாக்கிய 17 வயது சிறுவன்..!! வழக்கில் திடீர் திருப்பம்..!!

Tue Feb 24 , 2026
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நீண்ட நாட்களாக தனிமையில் வசித்து வந்த 45 வயதான சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), தனது வீட்டு வேலைகளுக்கு உதவியாக இருந்த 17 வயது சிறுவனுடன் கொண்ட கள்ளத்தொடர்பால் தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். ஏற்கனவே குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஒரு பெண்ணுக்கு, இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் கருவுற்றிருப்பது மருத்துவ ரீதியாக ‘லட்சத்தில் ஒருவருக்கு நடக்கும் […]
Sex 2025 5

You May Like