உங்கள் கனவை சொல்லுங்க திட்டத்தின் நிறைவாக ‘கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது.. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் மு.க ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்..
20230-ம் ஆண்டுக்குள் கிராமப்புறங்களில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் 5 லட்சம் வீடு, நகர்புறங்களில் 2 லட்சம் வீடுகள் என மொத்தம் 7 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்.
சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் ஆகியவற்றை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிய சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
2030-ம் ஆண்டிற்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் மனநல ஆலோசனை மையங்கள் அமைக்கப்படும்.
நிகர சாகுபடி பரப்பு 50 லட்சம் ஏக்கராக உயர்த்தப்படும்
நுண்ணுயிர் பாசனம் 21 லட்சம் ஹெக்டேருக்கு உயர்த்தப்படும்
2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாடு முழுவதும் 1,000 மாதிரிப் பள்ளிகள் உருவாக்கப்படும்
2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும்.
2030-ம் ஆண்டுக்குள் உயர்கல்வி சேர்க்கி 90%-த்தை எட்டும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
1.25 லட்சம் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வழங்கப்படும்..
நான் முதல்வன் 2.0 திட்டத்தின் மூலம் கூடுதல் திறன் பயிற்சிகள் வழங்கப்படும்.
ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் AI ஆய்வகம் அமைக்கப்படும்
ஜவுளி, தோல், ஆடை, கணினி போன்ற தொழில் துறைகளில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.
வீட்டு மனையற்ற ஒவ்வொரு குடும்பங்களுக்கும் வீட்டுமனை 2030-ம் ஆண்டுக்குள் வழங்கப்படும்.
18 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
மாவட்டந்தோறும் நவீன தொழில் பூங்கா அமைக்கப்படும்
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டம் விரிவுபடுத்தப்படும்
கிராமங்களை பொருளாதார வளர்ச்சி மையங்களாக மாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
2030-ம் ஆண்டுக்குள் பால் உற்பதி 4.5 கோடி லிட்டராக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மீன் வளர்ப்பை ஊக்குவித்து மீன் உற்பத்தியை 200 டன்னில் இருந்து 400 டன்னாக உயர்த்தப்படும்.
காந்தியடிகள் பெயரில் மாதிரி கிராமங்கள் திட்டம் உருவாக்கப்படும்.. முதல்கட்டமாக 10 ஊராட்சிகளில் உத்தமர் காந்தியடிகள் மாதிரி கிராமங்கள் திட்டம் செயல்படுத்தப்படும்.
2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் பொருளாதாரமாக உயர்த்துவோம்..
நாங்க தான் மீண்டும் வருவோம்.. மீண்டும் வெல்வோம்.. மீண்டும் மீண்டும் வெல்வோம்.. தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சி பயணத்தில் ஒருவரையும் பின் தங்க விடமாட்டோம்.. வெல்வோம் ஒன்றாக..” என்று தெரிவித்தார்..
Read More : கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம்.. மத்திய அரசு அதிரடி உத்தரவு.. உடனடி அமல்..!



