தமிழ்நாட்டை ஆள்வது திமுக தான்..! இன்ஸ்டா மூலம் ஆட்சிக்கு வந்துள்ளனர்..! மு.க. ஸ்டாலின் பேச்சு..!

mk stalin

தேர்தலில் தோல்வி அடைந்ததால் நாம் சோகமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.. நாம் தான் இன்று ஆட்சியில் இருக்கிறோம் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..


தஞ்சாவூரில் திமுக எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன் இல்லத் திருமண விழாவில் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.. அப்போது பேசிய அவர் “ தோல்வி, வெற்றி இரண்டையும் சமமாக கருதி உழைத்துக் கொண்டிருக்கும் இயக்கம் தான் திமுக.. திமுக ஏதோ படுதோல்வி அடைந்துவிட்ட மாதிரி ஒரு தோற்றத்தை எதிரிகள் சித்தரித்து வருகின்றனர்..

இதுவரை நடந்த தேர்தலில் திமுக பலமுறை தோல்வி சந்தித்திருக்கிறது.. ஆனால் தோல்வி நேரத்தில் தான் பீனிக்ஸ் பறவை போல் திமுக எழுச்சி பெறும்.. நாம் சோகமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.. நாம் தான் இன்று ஆட்சியில் இருக்கிறோம்.. நமது திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்களை நிறைவெற்றினோம்..

திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களை யாராலும் மாற்ற முடியாது.. எனவே நமது திட்டங்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டை ஆள்வது திராவிட மாடல் ஆட்சி தான்.. நமது கட்சி என்பது ஒரு கட்டமைப்பை கொண்டிருக்கும் கட்சி.. நாடாளுமன்ற தேர்தல் முடிந்த உடனேயே நாம் சட்டமன்ற தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டோம்.. எஸ்.ஐ,ஆர், பாக முகவர்களை நியமிப்பது, மாநாடுகளை நடத்தியது என நாம் அனைத்து பணிகளையும் செய்து தோல்வியை சந்தித்தோம்.. அவர்கள் வாக்காளர்களை சந்திக்காமல், பூத் ஏஜெண்ட் அமைக்கவில்லை.. இப்படி எந்த பணியையும் செய்யாமல் ஆட்சிக்கு வந்துள்ளனர்..

அவர்கள் சோஷியல் மீடியாக்களில் சிறு பிள்ளைகளை பிரச்சாரம் செய்ய வைத்து, வெற்றி பெற்றுவிட்டனர்.. இன்ஸ்டாகிராம் மூலம் ஆட்சிக்கு வந்துள்ளனர்.. நமது கணக்கு தவறாக போய்விட்டது.. இனிமே நாம் உஷாராக இருக்க வேண்டும்.. அதையும் முறியடிக்கும் வகையில் வகையில் செயல்படுவோம்.. எதை பற்றியும் கவலைப்பட வேண்டாம்.. இயக்கம் இருக்கிறது, நாம் இருக்கிறோம். நாம் தான் மீண்டும் வருவோம்.. நாம் எதிர்க்கட்சியாக இருந்தாலும் நமது கடமையை ஆற்றுவோம்..” என்று தெரிவித்தார்..

Read More : Flash : “கற்பூரம் கரையலாம்.. கட்சி கரையலாமா..” அதிமுகவில் இருந்து செம்மலை விலகல்..! ஷாக்கில் இபிஎஸ்..!

English Summary

“There is no need for us to be saddened by our defeat in the election; after all, it is we who are currently in power,” stated DMK President M.K. Stalin.

RUPA

Next Post

450 குழந்தைகள் பலி.. வங்கதேசத்தில் மோசமடைந்த தட்டம்மை பரவல்.. 50 ஆயிரத்தை கடந்த பாதிப்புகள்!

Mon May 18 , 2026
450 children die.. Measles outbreak worsens in Bangladesh.. Cases exceed 50 thousand!

You May Like