திருச்சியை அடுத்த சிறுகனூரில் இன்று திமுகவின் 12-வது மாநில மாநாடு நடைபெற்றது.. இந்த மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், மாநாஅட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள 112 உயர கம்பத்தில் திமுக கொடியை ஏற்றினார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த நடைமேடையில் முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கை காட்டிய படியே ரேம்ப் வாக் சென்றார்.. இதை தொடர்ந்து மேடையில் வைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் படங்களுக்கு முதல்வர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதை தொடர்ந்து இந்த மாநாட்டில் முதல்வர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார்.. அப்போது ” திமுகவின் பெருஞ்சேனை ஒன்று இங்கு திரண்டுள்ளது.. அந்த சேனையிலன் தலைமை தொண்டன் நான்.. கடந்த 3 மாதங்களாக நாம் நடத்துவது மாநாடுகள் தான்.. இளைஞரணி சந்திப்பு மாநாடுகள், மகளிரணியின் வெல்லும் தமிழ் பெண்கள் மாநாடுகள், பூத் நிர்வாகிகள் பயிற்சி மாநாடு என லட்சக்கணக்கான தொண்டர்களை சந்தித்து தேர்தல் பணிகளை தொடங்கினோம்.. அதைவிட பெரிதினும் பெரிதாக இந்த மாநாட்டை நடத்தி உள்ளோம்..
என்னை இளமையாக வைத்திருக்க காரணமே உங்கள் அன்பு தான்.. உங்களை எல்லாம் உடன்பிறப்புகளாக பெற நான் என்ன தவம் செய்தேனோ.. உங்களால் தான் நான் வளர்ந்தேன். உங்களால் தான் தான் உயர்ந்தேன்.. உங்களுக்காக தான் நான் வாழ்கிறேன்.. இதெல்லாம் இன்றைக்கு நேற்றைக்கு ஏற்பட்ட பந்தமா? 75 ஆண்டுகளாக தொடரும் அன்பு இது..
கடைசி பாலில் சிக்சர் அடித்து ஜெயிக்கும் Grand Finishing போல, வரப்போகும் தேர்தலில் பிரம்மாண்ட வெற்றி பெறவே இந்த மாநாடு.. ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்பது தனிநபர் முழக்கம் கிடையாது..
திருச்சி என்றாலே திருப்பம், முழக்கம், மகத்தான எழுச்சி, வெற்றி.. இந்தியாவிலேயே முதல் மாநில கட்சியாக நமது கழகத்தை ஆட்சியில் அமர்த்தினார் அண்னா.. அண்ணா வழியில் கலைஞர் ஆட்சி செய்தார்..
7-வது முறை மட்டுமல்ல, எப்போதும் திமுக தான் தமிழ்நாட்டை ஆட்சி செய்யும்.. தமிழை காத்தவர்கள் நாம்.. தமிழ்நாடு என்று பெயர் வைத்தவர்கள் நாம்.. தமிழ்நாடு நம்மை நம்பி தான் இருக்கிறது.. நாமும் தமிழ்நாட்டை நம்பி தான் இருக்கிறோம்..” என்று தெரிவித்தார்..
Read More : மாநிலங்களவை தேர்தல்..! தமிழக வேட்பாளர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வு..!



