“அமெரிக்கா இல்ல.. போரின் முடிவை ஈரான் தான் முடிவு செய்யும்..” டிரம்பின் கருத்துக்கு பதிலடி..

Iran Israel 3

இஸ்ரேல் ஈரான் போர் தீவிரமடைந்து வரும் நிலையி, இந்த போர் எப்போது முடிவடையும் என்பது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியிருந்தார்.. அப்போது “ஈரானுக்கு எதிரான போர் நீண்ட காலம் நீடிக்காமல் குறுகிய காலத்திலேயே முடிவடையக்கூடும். ஈரானில் இஸ்லாமிய ஆட்சியை பாதுகாக்கும் போராட்டத்தை மேற்பார்வை செய்ய புதிய கடுமையான நிலைப்பாட்டைக் கொண்ட உயர்ந்த மதத் தலைவரை தேர்வு செய்திருந்தாலும், இந்தப் போர் குறுகிய காலமே நீடிக்கலாம் என்று கூறினார்.


ஈரான் போரின் காலக்கெடு குறித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கருத்துக்கு ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை பதிலளித்துள்ளது. இந்தப் போரின் முடிவை தீர்மானிப்பது அமெரிக்கா அல்ல, ஈரான் என தெரிவித்துள்ளது.

டிரம்பின் இந்தக் கருத்துக்கு பதிலளித்த இஸ்லாமிய பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் அலி முகமது நயினி இதுகுறித்து பேசிய போது “ டிரம்பின் இந்தக் கருத்துகள் முழுவதும் பொய்கள் மட்டுமே என்று அவர் குற்றம் சாட்டினார். அமெரிக்கா அவமானகரமான தோல்விகளை சந்தித்த பிறகு, டிரம்ப் “படை வெற்றிகளை உருவாக்கிக் காட்ட முயற்சிக்கிறார்” என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் “இந்தப் போரின் முடிவை தீர்மானிப்பவர்கள் நாங்கள்தான். உங்களுடைய ஆயுத களஞ்சியம் விரைவில் காலியாகப் போகிறது என்பதையும், இந்தப் போரிலிருந்து மரியாதையாக வெளியேறும் வழியை நீங்கள் தேடுகிறீர்கள் என்பதையும் நாங்கள் அறிந்திருக்கிறோம். ஏன் நீங்கள் அமெரிக்க மக்களிடம் உண்மையை சொல்லவில்லை?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் “பெர்ஷியக் கடல் பகுதியில் உள்ள அமெரிக்காவின் அனைத்து இராணுவ கட்டமைப்புகளும் அழிக்கப்பட்டுவிட்டன என்ற உண்மையை அமெரிக்க மக்களுக்கு தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே டிரம்ப் அதை மறைக்கிறார்,” என்று அவர் குற்றம் சாட்டினார்.

டொனால்ட் டிரம்ப் முன்வைத்த மற்றொரு குற்றச்சாட்டையும் முகமது அலி நயினி மறுத்தார். அமெரிக்கா மற்றும் Israel நடத்திய தாக்குதல்கள் ஈரானின் ஏவுகணை திறனை குறைத்துவிட்டதாக டிரம்ப் கூறியிருந்தார். ஆனால் அதனை மறுத்த நயினி, “போரின் ஆரம்ப நாட்களை விட தற்போது அதிக எண்ணிக்கையில் ஏவுகணைகள் ஏவப்படுகின்றன. மேலும் அவற்றின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது; அவற்றின் வெடிகுண்டுகளின் எடையும் ஒரு டன்-க்கும் மேல் உள்ளது,” என்று தெரிவித்தார்.

முன்னதாக இதுகுறித்து பேசிய டிரம்ப் “மிக விரைவில் எல்லாம் முடிந்து விடும். பாருங்கள், அவர்களிடம் இருந்த அனைத்தும் அழிந்துவிட்டது; அவர்களின் தலைமைத்துவமும் அதில் அடங்கும். உண்மையில் அவர்களின் இரண்டு நிலை தலைமைத்துவம் கூட இப்போது இல்லை. மேலும் அதற்கு மேலான சிலரும் இல்லை. அவர்கள் பற்றி பேசப்படும் தலைவர்களை பெரும்பாலான மக்கள் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை. அதனால் இது மிகவும் சக்திவாய்ந்ததும், மிகவும் பயனுள்ளதுமான நடவடிக்கையாக இருந்தது,” என்று அவர் கூறினார்.

அதே நேரத்தில், ஈரான் போர் குறுகிய காலமே நீடிக்கும் என்று கூறிய சில நிமிடங்களுக்குப் பிறகு, டிரம்ப் மேலும் கடுமையான போர் இன்னும் வரக்கூடும் என எச்சரித்தார். உலகின் எண்ணெய் விநியோகத்தை தடுக்க ஈரான் ஏதேனும் முயற்சி செய்தால், அதற்கு எதிராக அமெரிக்கா தனது நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் பேசிய டிரம்ப் ” ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் எண்ணெய் போக்குவரத்தை ஈரான் தடை செய்ய முயன்றால், அமெரிக்கா “20 மடங்கு கடுமையாக” பதிலடி கொடுக்கும். மேலும், ஈரான் தனது தேசிய அடிப்படை கட்டமைப்புகளை மீண்டும் கட்டமைப்பதை மிகவும் கடினமாக்கும் வகையில் “எளிதில் அழிக்கக்கூடிய இலக்குகளை” அமெரிக்கா தாக்கும் திறன் கொண்டது என்றும் அவர் எச்சரித்தார்.

இறுதியாக “இந்த அனைத்து அச்சுறுத்தல்களுக்கும் நாங்கள் ஒருமுறை என்றென்றைக்கும் முடிவு கட்டப் போகிறோம். அதன் விளைவாக அமெரிக்க குடும்பங்களுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் குறையும்,” என்று டிரம்ப் தெரிவித்தார்.

Read More : கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு? எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு..!

RUPA

Next Post

Breaking : மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய தங்கம் விலை.. வெள்ளி விலை ரூ.10,000 உயர்வு.. இன்றைய நிலவரம் இதோ..!

Tue Mar 10 , 2026
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]
jewel 1

You May Like