தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள் மருத்துவமனைகள் என அனைத்தும் மற்ற மாநிலங்களை விட சிறப்பான நிலையில் இருக்கிறது. மேலும் 2021 ஆம் ஆண்டு முதல் திமுக தலைமையிலான அரசி ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல்வேறு நலத்திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறது.
நேற்று கோவையில் நடைபெற்ற விழாவில் 780 கோடி ரூபாய் செலவில் கூட்டு குடிநீர் திட்டத்தை மாநில விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இவை தவிர தமிழகத்தில் பேருந்து நிலையங்கள் மருத்துவமனைகள் நூலகங்கள் என தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்டு வருகிறது என மத்திய குடிநீர் வளங்கள் துறை பாராட்டு தெரிவித்து இருக்கிறது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 100% குடிநீர் வசதி வழங்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம் என மத்திய குடிநீர் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. மேலும் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் 74% வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இது தமிழகத்தை பொறுத்தவரை 80.43% ஆக இருக்கிறது. தமிழகம் ஒவ்வொரு துறையிலும் இந்தியாவிற்கே முன்னோடியாக செயல்படுகிறது என வாழ்த்து தெரிவித்திருக்கிறது.