ஈரானுக்கு எதிரான தொடர் போரை ஏப்ரல் 9-ம் தேதி முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இஸ்ரேலிய ஊடகங்கள் ஒரு அரசாங்க அதிகாரியை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன. தெஹ்ரானின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை நிறுத்தி வைக்கும் தனது முடிவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் “ஆக்கப்பூர்வமான” பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகக் காரணம் காட்டி, ஈரானிய மின்சாரம் மற்றும் எரிசக்தி வசதிகளைக் குறிவைக்கும் தாக்குதல்களுக்கு ஐந்து நாள் இடைநிறுத்தத்தை டிரம்ப் அறிவித்தார்.
“போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இலக்குத் தேதியாக அமெரிக்கா ஏப்ரல் 9 ஆம் தேதியை நிர்ணயித்துள்ளது. இது, தொடர் சண்டைகள் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கு சுமார் 21 நாட்களை விட்டுச் செல்கிறது,” என்று இஸ்ரேலின் மிகப்பெரிய செய்தித்தாள்களில் ஒன்றான ‘யெடியோத் அஹ்ரோனோத்’ நாளிதழ், பெயர் செய்தி வெளியிட்டுள்ளது.
“இந்த மாத இறுதியில் தேசிய இஸ்ரேல் பரிசைப் பெறுவதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேலுக்கு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள பயணத்திற்கு முன்னதாகவே போர் முடிவுக்கு வரும். ஏப்ரல் 9 ஆம் தேதி போரை முடிவுக்குக் கொண்டுவருவது, சுதந்திர தினத்தன்று இஸ்ரேல் பரிசைப் பெறுவதற்காக டிரம்ப் இஸ்ரேலுக்கு வர வழிவகுக்கும்,” என்றும் அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியதாக இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது..
பாகிஸ்தானில் அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய மத்தியஸ்த நாடுகள் முயன்று வருவதாகவும், அது இந்த வாரத்தின் பிற்பகுதியில் நடைபெறக்கூடும் என்றும் பெயர் குறிப்பிடப்படாத இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் கூறியதாக ‘தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்’ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விவாதங்கள் குறித்தோ, அல்லது இதில் தங்களுக்குத் தொடர்பில்லை எனக் ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் மறுத்துள்ளார்.. இது நிதிச் சந்தைகளைக் கையாளும் நோக்கம் கொண்ட “போலிச் செய்தி” என்று ட்ரம்பின் கூற்றுகளை அவர் விமர்சித்துள்ளார்..
இதனிடையே வெள்ளை மாளிகை இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.. வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட் வெளியிட்ட அறிக்கையில் “ அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ், அமைதிப் பணிகளுக்கான அமெரிக்க சிறப்பு ஜனாதிபதி தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் தொழிலதிபரும் அமெரிக்க ஜனாதிபதியின் முன்னாள் மூத்த ஆலோசகருமான ஜாரெட் குஷ்னர் ஆகியோர் இஸ்லாமாபாத்தில் ஈரானிய அதிகாரிகளைச் சந்திப்பார்கள் என்ற செய்திகள் குறித்து தற்போதைக்கு உறுதியாக எதுவும் கூற முடியாது..” என தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையால் இது முறையாக அறிவிக்கப்படும் வரை, இதை இறுதி முடிவாகக் கருதக்கூடாது என்றும் லீவிட் கூறினார். மேலும் “இவை நுட்பமான ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள், மேலும் அமெரிக்கா பத்திரிகைகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தாது. இது ஒரு நிலையற்ற சூழல், மேலும் சந்திப்புகள் குறித்த ஊகங்கள், வெள்ளை மாளிகையால் அவை முறையாக அறிவிக்கப்படும் வரை இறுதியானவையாகக் கருதப்படக்கூடாது.” என்று தெரிவித்துள்ளார்.
Read More : எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர வெடிப்பு..! கட்டுங்கடங்காத தீ..! பதற வைக்கும் வீடியோ..!



