இபிஎஸ் முடிவால் அப்செட்.. அண்ணாமலை தேர்தலில் போட்டியிடவில்லையாம்.. என்ன காரணம்..? பரபர தகவல்கள்..!

deccanherald 2024 07 cb49fef6 4362 4a81 9d8d ecb90333ef90 Post Lok Sabha polls Annamalai and EPS indulge in war of words

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.. மயிலாப்பூர், தளி, மொடக்குறிச்சி, உதகமண்டலம், அவினாசி (தனி), திருப்பூர் தெற்உ, கோவை வடக்கு, கந்தர்வ கோட்டை (தனி), புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர் (தனி), ராதாபுரம், நாகரகோவில், விளவன்கோடு, ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி, மானாமதுரை (தனி), ராமநாதபுரம், குளச்சல், பத்மநாபபுரம், ராசிபுரம் (தனி) என பாஜகவுக்கு தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது.


சென்னை, கோவையில் தலா 3 தொகுதிகளை பாஜக கோரிய நிலையில், எடப்பாடி பழனிசாமி சென்னையில் மயிலாப்பூர், கோவை வடக்கு மட்டும் வழங்கி உள்ளார்..

இந்த நிலையில் அதிமுக – பாஜக தொகுதி பங்கீடு விவகாரத்தால் அண்ணாமலை அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.. கோவையில் சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையத்தில் போட்டியிட அண்ணாமலை விரும்பியதாக கூறப்படுகிறது.. ஆனால் அதிமுக தரப்பில் பாஜகவிக்று கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் தொகுதிகளை ஒதுக்க முன் வரவில்லை.

கோவையில் ஒரே ஒரு தொகுதியை, அதாவது கோவை வடக்கு தொகுதியை மட்டும் பாஜகவிற்கு அதிமுக ஒதுக்கி உள்ளது.. வானதி ஸ்ரீனிவாசன் இந்த தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. திருப்பூரில் அண்ணாமலை விரும்பிய பல்லடம் தொகுதியும் பாஜகவிற்கு ஒதுக்கப்படவில்லை.. அதே போல் அண்ணாமலையின் சொந்த மாவட்டமான கரூரிலும் பாஜகவிற்கு சீட் ஒதுக்கப்படவில்லை..

தான் விரும்பிய தொகுதிக்காக பாஜக தேசிய தலைமைக்கு அண்ணாமலை அழுத்தம் கொடுத்ததாக தெரிகிறது. தொகுதி பங்கீடு அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக பியூஷ் கோயலை அண்ணாமலை சந்தித்து பேசியிருந்தார்.. எனினும் தான் விரும்பிய தொகுதியில் ஒதுக்கப்படாததால் அண்ணாமலை அதிருப்தியில் இருக்கிறாராம்.. எனவே தேர்தலில் போட்டியிடுவதை தவிர்க்க அண்ணாமலை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தனது ஆதரவாளர்களிடம் வரும் சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்று அண்ணாமலை கூறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. இதுதொடர்பாக தான் தேசிய தலைமைக்கு அவர் கடிதம் எழுதி உள்ளதாகவும் கூறப்படுகிறது.. எனவே வரும் தேர்தலில் அண்ணாமலை போட்டியிட வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது..

RUPA

Next Post

Flash : நகைப்பிரியர்கள் தலையில் இடியை இறக்கிய தங்கம் விலை..! இன்று எவ்வளவு உயர்ந்துள்ளது..?

Thu Mar 26 , 2026
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
jewel n

You May Like