Breaking : ஒரே நேரத்தில் முதல்வர் ஸ்டாலின், விஜய் வேட்புமனு தாக்கல்..! பரபரக்கும் தேர்தல் களம்..!

vijay stalin

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.. வாக்கு எண்ணிக்கை 4-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.. தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடைந்து தமிழ்நாட்டின் பிரதான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்..


இந்த நிலையில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.. இன்று முதல் ஏப்.6 வரை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.. எனினும் இந்த 8 நாட்களில் 4 நாட்களே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்.

மார்ச் 30, ஏப்ரல், 2,4, 6 ஆகிய தேதிகளில் வேட்புமனு தாக்கல் செய்யலாம். மீதமுள்ள 4 நாட்கள் அரசு விடுமுறை நாட்கள் என்பதால் அன்றைய தினங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. அதாவது மார்ச் 31, ஏப்ரல் 1. 3, 5 ஆகிய நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது.. ஏப்ரல் 7 ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யபடும். வேட்புமனுக்களை திரும்ப பெற ஏப்ரல் 9 ம் தேதி கடைசி நாளாகும். அதன் பின்னர் வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.

வேட்புமனு தாக்கலின் முதல் நாளான இன்று அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் இன்று வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்..

இந்த நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று சென்னை கொளத்தூர் தொகுதில் வேட்புமனு தாக்கல் செய்தார்.. தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். கொளத்தூர் தொகுதியில் 4-வது முறையாக முதல்வர் ஸ்டாலின் போட்டியிடுகிறார்.. சென்னை கொளத்தூர் தொகுதியில் 2011, 2021, 2021 தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றார்..

1989, 1996, 2001, 2006 தேர்தல்களில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் மு,க ஸ்டாலின் வெற்றி பெற்றார்.. இதுவரை 7 முறை தேர்தல் ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

இதனிடையே பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல் செய்தார்.. ஒரே நேரத்தில் முதல்வரும், ஸ்டாலினும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.. வியாசர்பாடி அம்பேதக்ர் கலைக்கல்லூரியில் விஜய் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.. விஜய் கொளத்தூர் மட்டுமின்றி, திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிடுகிறார்..

Read More : Flash : வாரத்தின் முதல் நாளே குட்நியூஸ்.. தங்கம் விலை தடாலடி குறைவு.. எவ்வளவு தெரியுமா..?

RUPA

Next Post

12 டன் கிட்கேட் சாக்லேட்டுகள் திருட்டு..! லாரியுடன் திருடி கொள்ளையர்கள் கைவரிசை..!

Mon Mar 30 , 2026
ஈஸ்டர் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பு, ஐரோப்பா முழுவதும் பயணித்துக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான கிட்கேட் சாக்லேட் பார்கள் கொண்டு செல்லப்பட்ட ஒரு லார திருடப்பட்டுள்ளது. 12 டன்களுக்கும் அதிகமான சாக்லேட் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த லாரி 4 லட்சத்திற்கும் அதிகமான கிட்கேட் பார்களை ஏற்றிச் சென்றதுடன், மத்திய இத்தாலியில் உள்ள ஒரு தொழிற்சாலையிலிருந்து புறப்பட்டது. மார்ச் 26 அன்று போலந்துக்குச் செல்லும் வழியில் அது திருடப்பட்டது என்று […]
kitkat n

You May Like