கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வந்தது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் திடீரென உயர்ந்து பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று (15.04.2026 – புதன்கிழமை) சவரனுக்கு ரூ. 800 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,560-க்கு விற்பனையானது. தங்கம் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 14,320-க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.275-க்கும், கிலோவுக்கு ரூ. 10 ஆயிரம் உயர்ந்து ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,14,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 40 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.275-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
Read more: டீ குடிக்க சென்ற போது நேர்ந்த துயரம்.. +2 முடித்த 3 மாணவர்கள் ஆம்னி பஸ் மோதி பரிதாபமாக பலி..!



