கருத்துக் கணிப்பு இல்ல.. கடுப்பில் விட்ட கணிப்பு.. கணிப்பாளர்களை ஒருமையில் சாடிய விஜய்..!

tvk vijay nellai campaign

சென்னையில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் ” இப்ப சமீபத்தில் நிறைய காமெடிகள் நடக்கிறது.. ஸ்டாலின் சாரும் மற்றும் பலரும் சேர்ந்து கொண்டு கருத்துக் கணிப்பு எண்று சொல்லி கடுப்பில் விட்ட கருத்துகணிப்பு முடிவுகளை வெளியிட்டிருக்கிறார்கள்.. அதில் திமுக கூட்டணி 300 இடங்களில் ஜெயிக்குமாம்.. மற்றும் பலர் கூட்டணி 700 இடங்களில் ஜெயிக்குமார்.. இவர்களின் தில்லு முல்லுக்கு ஒரு அளவே இல்லை…


40 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் தான் விஜய்க்கு ஓட்டு போடுவார்களாம்.. 50 வயது முதல் 80 வயதுக்கு உட்பட்டவர்கள் விஜய்க்கு ஓட்டுப்போட மாட்டார்களாம்.. இதில் 40 வயதுக்கு உட்பட்ட வாக்களார்கள் மிகவும் குறைவாம்.. 50 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாம்.. இப்படி பில்டப் மேல் பில்டப்..
ஆனால் தேர்தல் ஆணையம் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.. அதில் சுமார் 2 கோடி பேர் 40 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் தான்.

எங்கடா போனீங்க.. கடுப்பில் விட்ட கணிப்பாளர்களே எங்க போனீங்க.. 60 வயதுக்கு மேல் இருப்பவர்கள் அனைவரும் நம்ம வீட்டு பிள்ளை விஜய் என்று சொல்வதெல்லாம் உங்கள் காதில் விழவில்லையோ? இந்த உண்மை எல்லாம் வெளியில் சொல்லக் கூடாது என்று ரெண்டு பேரும் நல்லா கவனித்து அனுப்பினார்களோ? இந்த கருத்து கணிப்பு, கடுப்பில் விட்ட கணிப்பு என்ன விட்டாலும் திமுகவும், மற்றும் பலரும் மண்ணைக் கவ்வப் போவது உறுதி..

அவர்களின் ஆட்சிக் கனவு, ஊழல் கனவு, கொள்ளையடிக்கும் கனவு எல்லாம் கதம் கதம் தான்.. மக்களே, ஸ்டாலின் சாரிடம் இருந்து நம்ம தமிழ்நாட்டை காப்பாற்றி ஆகனும்.. நம்ம ஜனநாயகத்தை காப்பாற்றி ஆகனும்.. என்ன வேலையாக இருந்தாலும் தயவு செய்து விசில் சின்னத்திற்கு ஓட்டுப் போடுங்க.. தயவு செய்து உங்க விஜய்க்கு வாய்ப்புக் கொடுங்க..” என்று தெரிவித்தார்..

RUPA

Next Post

எடப்பாடியை தவிர வேறு தொகுதியில் நின்று உங்களால் ஜெயித்து காட்ட முடியுமா? இபிஎஸ்-க்கு விஜய் சவால்..!

Tue Apr 21 , 2026
சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று பேசினார். அப்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு விஜய் பதிலடி கொடுத்தார்.. பிரச்சனை என்றால் விஜய் வெளியே வரமாட்டார் என்று விமர்சித்த இபிஎஸ்-க்கு விஜய் பதிலளித்தார்.. அப்போது பேசிய அவர் ” ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் விஜய் வெளியவே வரமாட்டார் என்று, மற்றும் பலர் கட்சியில் ஒருவர் இருக்கிறார்.. 10 முறை தோல்வி அடைந்து, இன்னும் […]
1332588

You May Like