TN Election Results 2026: திருச்சி கிழக்கில் விஜய்க்கு பின்னடைவு..! – முதல் சுற்று நிலவரம்..

vijay 2

கடந்த 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற 17வது சட்டசபை தேர்தலில், சுமார் 85 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்த முறை வாக்குப்பதிவு அதிகரித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மொத்தம் 75,064 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள், 62 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, 240 அறைகள், 3,324 மேஜைகள் மற்றும் 10,545 பணியாளர்கள் மூலம் எண்ணப்பட்டு வருகின்றன.


காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்னப்பட்ட நிலையில், 8.30 முதல் இயந்திர வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. முதற்கட்ட முடிவில் பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் முதல் சுற்றில் 507 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்று வருகிறார். அதே சமயம் திருச்சி கிழக்கில் பின் தங்கியுள்ளார். சேப்பாக்கம் தொகுதியில் 608 வாக்குகள் பெற்று உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். காட்பாடி தொகுதியில் துரைமுருகனுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் தி. நகர் தொகுதியில் தவெக வேட்பாளர் புஸ்ஸி ஆனந்த் 738 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் செல்வப்பெருந்தகைக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முதற்கட்ட முடிவுகளின்படி திமுக 21 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. அதிமுக 13 தொகுதிகளிலும், தவெக 10 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.

Read more: TN Election Results 2026: தபால் வாக்குகளில் திமுக முன்னிலை.. இரண்டாம் இடத்தில் அதிமுக..!

English Summary

TN Election Results 2026: Vijay suffers setback in Trichy East..!

Next Post

Flash: கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் பின்னடைவு.. திமுக அமைச்சர்கள் தொகுதிகளில் தவெக முன்னிலை..!

Mon May 4 , 2026
Flash: MK Stalin's setback in Kolathur.. Thaveka candidates are ahead in the constituencies where DMK ministers are contesting..!
TVk vijay stalin

You May Like