தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக எதிர்பாராத தோல்வியை சந்தித்து, எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.. தமிழக அரசியல் வரலாற்றில் நீண்ட அனுபவம் கொண்ட திமுக, கடந்த பல தசாப்தங்களில் வெற்றி–தோல்வி என பல ஏற்றத் தாழ்வுகளை கடந்து வந்துள்ளது. 1967 முதல் 2026 வரை நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் திமுக பெற்ற இடங்களும், வாக்கு சதவீதங்களும் அதன் அரசியல் பயணத்தை தெளிவாக காட்டுகின்றன.
திமுக முதன்முதலில் அறிஞர் அண்ணா தலைமையில் 1967ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றியது. அதன்பின் மு.கருணாநிதி தலைமையில் 1971ஆம் ஆண்டு 184 இடங்களில் வெற்றி பெற்று மிகப்பெரிய சாதனை படைத்தது. பின்னர் 1989, 1996, 2006 என பல காலக்கட்டங்களில் திமுக ஆட்சியை அமைத்தது.
திமுகவின் மிக மோசமான தோல்வி 1991 தேர்தலில் ஏற்பட்டது… முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மறைவுக்கு பின் நடந்த தேர்தலில் திமுக வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இருந்தாலும் அப்போது கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி வெற்றி பெற்றார்.
அந்த கடுமையான பின்னடைவுக்குப் பிறகு, 1996ஆம் ஆண்டு திமுக மீண்டு வந்து, 173 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. அதேபோல், 2011 தேர்தலில் கட்சி 23 இடங்களுக்கு மட்டுமே குறைந்தது. தற்போது நடைபெற்ற 2026 தேர்தலில் திமுக மட்டும் 59 இடங்களில் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது..
திமுக தனது ஆரம்ப காலத்திலிருந்து இன்று வரை பெற்ற தேர்தல் முடிவுகள் அதன் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி இரண்டையும் பிரதிபலிக்கின்றன. 1962ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக 50 இடங்களை கைப்பற்றி 27.1% வாக்குகளை பெற்றது. 1967ஆம் ஆண்டு 137 இடங்களுடன் 40.7% வாக்குகளை பெற்று முதன்முறையாக ஆட்சியை அமைத்தது. 1971ஆம் ஆண்டு 184 இடங்களும் 48.6% வாக்குகளும் பெற்று உச்ச நிலையை எட்டியது.
ஆனால், 1977 தேர்தலில் கட்சி 48 இடங்களுக்கும் 24.9% வாக்குகளுக்கும் சரிந்தது. 1980 மற்றும் 1984 தேர்தல்களில் முறையே 37 (22.1%) மற்றும் 24 (23.5%) இடங்களை மட்டுமே பெற்றது. பின்னர் 1989ஆம் ஆண்டு மீண்டும் எழுச்சி பெற்று 150 இடங்களும் 33.2% வாக்குகளும் பெற்றது. 1991ஆம் ஆண்டு மீண்டும் சரிவு ஏற்பட்டு 2 இடங்களும் 22.5% வாக்குகளும் மட்டுமே கிடைத்தன.
1996ஆம் ஆண்டு மீண்டும் பெரிய வெற்றி பெற்று 173 இடங்களும் 42.1% வாக்குகளும் கிடைத்தன. அதன்பிறகு 2001 தேர்தலில் 31 (30.9%), 2006 தேர்தலில் 96 (26.5%) இடங்கள் கிடைத்தன. 2011ஆம் ஆண்டு 23 இடங்களும் 22.4% வாக்குகளும் பெற்று குறைந்த நிலையில் இருந்த திமுக, 2016ஆம் ஆண்டு 89 இடங்களும் 31.6% வாக்குகளும் பெற்று மீண்டும் முன்னேறியது. 2021 தேர்தலில் 133 இடங்களும் 37.7% வாக்குகளும் பெற்று மீண்டும் ஆட்சியை அமைத்தது. 2026 தேர்தலில், திமுக 59 இடங்களையும் சுமார் 24.19% வாக்குகளையும் பெற்று எதிர்க்கட்சியாக மாறியுள்ளது.
திமுக வெற்றி பெற்ற தொகுதிகள் (வாக்கு சதவீதம்)
1962 – 50 (27.1%)
1967 – 137 (40.7%)
1971 – 184 (48.6%)
1977 – 48 (24.9%)
1980 – 37 (22.1%)
1984 – 24 (23.5%)
1989 – 150 (33.2%)
1991 – 2 (22.5%)
1996 – 173 (42.1%)
2001 – 31 (30.9%)
2006 – 96 (26.5%)
2011 – 23 (22.4%)
2016 – 89 (31.6%)
2021 – 133 (37.7%)
2026 – 59 (24.19%)
இந்த புள்ளிவிவரங்கள் திமுக ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்தாலும், சில காலங்களில் கடுமையான வீழ்ச்சியையும் சந்தித்திருப்பதை தெளிவாக காட்டுகிறது. அதே நேரத்தில், திமுக தோல்விக்கு பின் மீண்டும் வலுவாக எழுந்து நிற்கும் திறனையும் காட்டுகிறது.
Read More : தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், என்ன நடக்கும்..? விஜய்க்கு இருக்கும் வாய்ப்புகள் என்னென்ன..?



