பெற்றோர்களே கவனம்!! வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவிக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..

girl abuse acid

பெற்றோர்கள் பலர், தங்களுக்கு இருக்கும் வேலையின் காரணமாக தங்களின் பிள்ளைகளை வீட்டில் தனியாக விட்டுச் செல்லும் வழக்கம் உள்ளது. ஆனால், பல நேரங்களில் அது பெரும் பிரச்சனைகளில் முடிந்து விடுகிறது. அந்த வகையில், தற்போது கோவை மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவி ஒருவருக்கு நேர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் 17 வயதான உஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அருகில் உள்ள பள்ளி ஒன்றில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் சம்பவம் தொடர்பாக உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுமியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், பாதிக்கப்பட்ட மாணவி தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி ஒருவருடன் பழகி வந்தது தெரியவந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அந்த நபர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  மேலும், தலைமறைவாக உள்ள அவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கட்டட மேஸ்திரி வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவியை ஏமாற்றி பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: அதிர்ச்சி!! பெற்ற பிள்ளைகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சிய தந்தை; பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்..

Saranya

Next Post

"10 ரூபாயை நான் திருடல!" பள்ளியில் அவமானப்படுத்திய ஆசிரியர்கள்; விரக்தியில் மாணவி எடுத்த விபரீத முடிவு…

Sat Jul 11 , 2026
பள்ளியில் ₹10 திருடியதாக ஆசிரியர்கள் பொய்க் குற்றச்சாட்டு கூறி அவமானப்படுத்தியதால், விரக்தியடைந்த எட்டாம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு நகர்ப்புற மாவட்டம் அனேக்கல் தாலுகா மரசூரு கிராமத்தை சேர்ந்தவர் அருணா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அருகில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று, சிறுமி வழக்கம் போல் இரவு தூங்க சென்றுள்ளார். […]
large n7191485511783708619982f448b86584f42efb579d6efd336bbe7c 85080

You May Like