பெரும் சோகம்..! பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி கோர விபத்தில் காலமானார்..!

rbc 1777987695

பிரபல சினிமா தயாரிப்பாளரும், நடிகர் ஜித்தன் ரமேஷ், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. சவுத்ரி சாலை விபத்தில் உயிரிழந்தார்.. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே கார் விபத்தில் சிக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்..


நாட்டாமை, சூரியவம்சம், புது வசந்தம், ஆனந்தம் உள்ளிட்ட படங்களை தயாரித்து பிரபலமானாவர் ஆர்.பி. சவுத்ரி.. விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்த பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் ஆர்.பி. சவுத்ரி என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று விஜய் வெற்றி பெற்றதை விசில் அடித்து கொண்டாடிய வீடியோவை நடிகர் ஜீவா வெளியிட்டிருந்தார்.. இந்த சூழலில் அவரின் தந்தை உயிரிழந்த செய்தி அவரின் மொத்த குடும்பத்தை உலுக்கி உள்ளது.. அவரின் மறைவுக்கு பல்வேறு திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..

Read More : நாளை மறுநாள் முதலமைச்சராக பதவியேற்கும் விஜய்..? பெரும்பான்மையை எப்படி நிரூபிக்க போகிறார்..?

RUPA

Next Post

"பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.. என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.." விஜய் உருக்கம்..!

Tue May 5 , 2026
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.. ஆட்சியமைக்க 118 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.. எனவே அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை.. மேலும்  எனவே தவெகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அடுத்தது தொங்கு சட்டசபை அமையும் என்று கூறப்படுகிறது.. இந்த சூழலில் […]
vijay tvk 2

You May Like