தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்ற பின்னர், கொள்கை தலைவர்களின் ஒருவரான பெரியாரின் நினைவிடத்திற்கு சென்று முதலமைச்சர் விஜய் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பதவியேற்பு விழாவுக்கு பின்னர், தமிழகத்தின் 13-வது முதலமைச்சராக பதவியேற்ற விஜய் நேரடியாக தலைமைச் செயலகத்திற்குச் சென்றார். அங்கு அவருக்கு காவல்துறை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து முதல்வர் அறைக்கு சென்ற விஜய், முதல்வர் நாற்காலியில் அமர்ந்து அதிகாரப்பூர்வ பணிகளை தொடங்கினார்.
அதனை தொடர்ந்து பெரியார் திடலுக்கு விஜய் வருகை தந்தார். சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு வந்த முதலமைச்சர் விஜயை, திராவிட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வரவேற்றனர். பெரியார் அருங்காட்சியகத்தையும் முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார். அங்கு திராவிட கழக தலைவர் கி.வீரமணி முதலமைச்சர் விஜய்க்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பெரியாரின் வாழ்க்கைப் பயணம், சமூக சீர்திருத்தப் போராட்டங்கள், பெண்கள் கல்வி, சாதி எதிர்ப்பு இயக்கங்கள் மற்றும் திராவிட இயக்க வரலாறு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் அரிய ஆவணங்களை விஜய் பார்வைட்ட்டார். பின்னர் அவர் பெரியார் ஈ.வி.ராமசாமியின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் விஜயுடன் ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன், ராஜ்மோகன் உள்ளிட்ட அமைச்சர்கள் உடன் இருந்தனர்.
Read more: Flash: திருச்சி கிழக்கு MLA பதவியை ராஜினாமா செய்தார் முதலமைச்சர் விஜய்..!



