தமிழக சட்டமன்றத் தேர்தலில் 4 முனை போட்டி நிலவிய நிலையில், தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மாநிலத்தின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பின்னர் காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் விஜய் ஆட்சியமைத்துள்ளார். இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் சினிமாத்துறையைச் சேர்ந்த பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தமிழக முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் பதவி ஏற்றிக்கொண்டார். தமிழக முதலமைச்சர் விஜய்க்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவு அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், பிரதமர் நரேந்திரமோடிக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் முதலமைச்சராகப் பதவியேற்பதற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமருக்கு நன்றி. எங்கள் மக்களின் நலனும் முன்னேற்றமுமே எங்களின் ஒரே நோக்கம். தமிழகத்தின் தொடர் வளர்ச்சிக்கு மத்திய அரசின் செயல்மிகு ஆதரவையும் ஒத்துழைப்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என தமிழக முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Read more: Flash: திருச்சி கிழக்கு MLA பதவியை ராஜினாமா செய்தார் முதலமைச்சர் விஜய்..!



