முதல்வராக பதவியேற்ற கையோடு சட்ட ஒழுங்கு குறித்து விஜய் – டிஜிபி முக்கிய ஆலோசனை..!

vijay meeting

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பதவியேற்பு விழாவுக்கு பின்னர், தமிழகத்தின் 13-வது முதலமைச்சராக பதவியேற்ற விஜய் நேரடியாக தலைமைச் செயலகத்திற்குச் சென்றார். அங்கு அவருக்கு காவல்துறை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து முதல்வர் அறைக்கு சென்ற விஜய், முதல்வர் நாற்காலியில் அமர்ந்து அதிகாரப்பூர்வ பணிகளை தொடங்கினார்.


தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த உயர்மட்ட ஆலோசனையில் தலைமைச் செயலாளர், டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்ட காவல் துறை மற்றும் நிர்வாகத்துறை உயரதிகாரிகள் பங்கேற்றனர். மாநிலம் முழுவதும் நடைபெறும் குற்றச்சம்பவங்கள், அவற்றை தடுக்கும் நடவடிக்கைகள், காவல் துறையின் கண்காணிப்பு முறைகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை மேம்படுத்தும் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த ஆலோசனையில் மாநிலம் முழுவதும் நிலவும் சட்டம் ஒழுங்கு சூழல், குற்றச்சம்பவங்களின் நிலை, பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் ஏற்படும் குற்றங்களை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கை மேலும் வலுப்படுத்த தேவையான கூடுதல் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுடன் கருத்துகளை பரிமாறியதாகவும் கூறப்படுகிறது.

Read more: Flash: “மத்திய அரசின் ஆதரவை எதிர்பார்க்கிறோம்” பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் நன்றி..!

English Summary

Vijay consults with Chief Secretary and DGP immediately after taking oath as Chief Minister..!

Next Post

Flash: தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம்.எல்.ஏ கருப்பையா பதவி ஏற்பு..! யார் இவர்..?

Sun May 10 , 2026
Cholavandhan MLA Karuppiah takes oath as the interim Speaker..! Who is this..?
governer

You May Like