தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 233 எம்.எல்.ஏக்கள் தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.. இந்த நிலையில் இன்று முறைப்படி சபாநாயகர் தேர்வு நடைபெற்றது..
தவெக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜே.சி.டி பிரபாகர் அமைச்சரவையில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இன்று சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்..
இந்த நிலையில், சபாநாயகராக ஜேசிடி பிரபாகர போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.. தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.. அப்போது ஜேசிடி பிரபாகரை சபாநாயகராக தேர்வு செய்ய முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த நிலையில் அமைச்சர் என். ஆனந்த் வழிமொழிந்தார்.. ஜேசிடி பிரபாகரை எதிர்த்து வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்வானார்..
அதன்படி ஜேசிடி பிரபாகரை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, அமைச்சர் செங்கோட்டையன் சபாநாகர் இருக்கையில் அமர வைத்தனர்.. சட்டப்பேரவை துணை சபாநாயகராக பட்டியலினத்தை சேர்ந்த மு.ரவிசங்கர் தேர்வு செய்யப்பட்டார்..
Read More : BREAKING| தவெகவுக்கு அதிமுக ஆதரவு.. இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை..! முடிவை அறிவித்தார் சி.வி சண்முகம்..



