திமுக, அதிமுக இணைந்து என்னை முதல்வராக்குவதற்கு பேசினர்.. திருமா பரபரப்பு பேட்டி..!

Thirumavalavan new 2

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் எந்த பெரும்பான்மையும் கிடைக்கவில்லை.. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் விஜய் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றதால் விஜய் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்தார்.. இதனால் தவெகவின் பலம் 107 ஆகும்.. காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுடன் சேர்ந்தது.. அதன்படி காங்கிரஸ் 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் 2, விசிக 2, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் 2 திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவளித்ததால் தவெகவின் பலம் 120ஆக உயர்ந்தது..


இந்த நிலையில் தவெகவுக்கு ஆதரவு அளவித்தது குறித்து திருமாவளவன் இன்று விளக்கம் அளித்தார்.. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ” கட்சியின் உயர்நிலைக் குழு ஆலோசனை செய்து தான் தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தோம்.. இடதுசாரிகள் போல் நிபந்தனையற்ற ஆதரவு இருக்க வேண்டாம் என்று தான் நானும் வலியுறுத்தினேன்.. அமைச்சரவையில் பங்களிப்பு வேண்டுமா, வேண்டாமா என்ற விவாதம் இருந்தது..

மரியாதை நிமித்தமாக முதல்வர் விஜய் சந்திக்க வருகிறார்.. அங்கு நிபந்தனை விதிக்க மாட்டோம்.. திமுக, அதிமுக இணைந்து என்னை முதல்வராக்குவதற்கு பேசியதாக எனக்கு தகவல் வந்தது.. தவெக உடன் திரைமறைவில் எந்த வித பேரமும் நடக்கவில்லை.. ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை இன்னமும் இருக்கிறது.. எதிர்காலம் யோசிக்காமல் பதவிக்காக முடிவெடுக்க முடியாது..

அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தால், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் நிலை ஏற்படும்.. திரைமறைவில் பேரம் பேசப்பட்டதாக வெளியான தகவல் தவறானது.. ஆட்சியில் பங்கு தொடர்பாக தவெக தரப்பில் ஏதும் தெரிவிக்கவில்லை..” என்று தெரிவித்தார்..

Read More : இபிஎஸ் போட்ட பிச்சையில் வெற்றி.. சொந்த மாவட்டத்தில் என்ன கிழித்தீர்கள்? சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணியை காட்டமாக விமர்சித்த அதிமுக..!

RUPA

Next Post

Breaking : முதல்வர் விஜய்யின் நேரடி கண்காணிப்பில் போதைப் பொருள் தடுப்பு படை.. அரசாணை வெளியீடு..!

Tue May 12 , 2026
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்துள்ளது.. விஜய் முதலமைச்சராக பதவியேற்ற உடன் தமிழ்நாட்டில் போதைப் பொருள் பரவலைக் கட்டுப்படுத்தவும், இளைஞர்களை பாதுகாக்கவும் 65 சிறப்புப் படைகள் அமைக்கப்படும் என்று ஆணையிட்டார்.. இதையடுத்து தமிழ்நாட்டில் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார்.. அதன்படி வழிபாட்டு தலங்கள் அருகில் உள்ள 2716 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகில் உள்ள 186 கடைகள், பேருந்து நிலையம் […]
cm vijay new

You May Like