முதல்வர் விஜயின் ஆஸ்தான ஜோதிடர் ரதன் பண்டிட்க்கு முக்கிய பதவி..! யார் இவர்..?

randhan pandit tvk vijay 040553421

முதல்வர் விஜயின் சிறப்பு பணி அதிகாரியாக ரதன் பண்டிட் வெற்றிவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே முதலமைச்சர் விஜய்க்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த ரதன் பண்டிட் தற்போது சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வரின் அரசியல் சிறப்புப் பணி அதிகாரியாக ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆணை இன்று முதல் அமலுக்கு வருகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


ராதன் பண்டிட் யார்? ராதன் பண்டிட், 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஜோதிடம், எண் கணிதம் மற்றும் தியானம் ஆகிய துறைகளில் அனுபவம் பெற்றவர் என கூறப்படுகிறது. ஆரம்பத்தில் “வெற்றிவேல்” என்ற பெயரில் அறியப்பட்ட இவர், 2008-ல் டெல்லிக்கு இடம்பெயர்ந்த பிறகு தனது பெயரை ரதன் பண்டிட் என மாற்றியதாக தகவல்கள் உள்ளன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆன்மீக ஆலோசகர் எனவும், 1991 தேர்தல் வெற்றியை முன்கூட்டியே கணித்தவர் எனவும் சில தரப்புகள் தெரிவிக்கின்றன. முதல்வர் விஜய் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார் என முன் கூட்டியே கணித்திருந்தார். விஜய் திருச்செந்தூர் கோயிலுகு சென்றபோது அவருடன் காரில் ரதன் பண்டிட் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Read more: “எல்லாம் பதவி வெறி.. வட இந்தியாவை போல தமிழ்நாடும் ஆகிவிட்டது.!” சி. வி. சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி..!

English Summary

Rathan Pandit Vetrivel appointed as Chief Minister Vijay’s Officer on Special Duty..! Who is he..?

Next Post

இந்தியாவிடம் 69 நாட்களுக்குப் போதுமான கச்சா எண்ணெய், 45 நாட்களுக்குப் போதுமான LPG இருப்பு உள்ளது.. மத்திய அரசு தகவல்..!

Tue May 12 , 2026
தற்போது நடைபெற்று வரும் மேற்கு ஆசிய மோதலுக்கு மத்தியிலும் நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று எண்ணெய் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இன்று (மே 12) உறுதியளித்தார். மேலும், இந்தியாவிடம் தற்போது 69 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் LNG கையிருப்பும், 45 நாட்களுக்குத் தேவையான LPG கையிருப்பும் உள்ளது என்றும் அவர் கூறினார். 45 நாட்களுக்கான LPG கையிருப்பு CII வருடாந்திர வர்த்தக […]
hardeep singh puri 1778569398 1

You May Like