“தவெக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது.. மீறினால்!” – கட்சி தலைமை எச்சரிக்கை..!

tvk celabration

பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும் வகையில் பேனர்கள், பதாகைகள் மற்றும் கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது என்று தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு, அமைச்சரும் கட்சியின் பொதுச் செயலாளருமான என்.ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதுதொடர்பாக என். ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழகத் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டதுதான் தமிழக வெற்றிக் கழகம். தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்ற, தமிழ்ச் சொந்தங்களின் குடும்பத்தில் ஒருவராக இருக்கக்கூடிய வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிகப் பெரிய பொறுப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

அதை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும். எனவே கழகத் தோழர்கள் யாரும் பிறந்தநாள் விழா மற்றும் குடும்ப விழாக்கள் தொடர்பாகப் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளிலோ, மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ எங்கும் பேனர்கள், பதாகைகள் உள்ளிட்டவற்றைக் கண்டிப்பாக வைக்கக் கூடாது.

பொதுமக்களுக்கு இடையூறாக எவ்விதக் கொண்டாட்டங்களிலும் யாரும் கண்டிப்பாக ஈடுபடக் கூடாது.பேனர்கள், கொண்டாட்டங்கள் உள்ளிட்ட எவற்றின் வாயிலாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரேனும் நடந்துகொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Read more: “சபாநாயகர் பதவி என்றாலே பயந்து ஓடிவிடுவார்கள்..” சட்டப்பேரவையில் CM விஜய் சொன்ன சுவாரஸ்ய வரலாறு..!

English Summary

“Don’t cause any disturbance to the public.. if you violate it!” – Party leadership warns TVK executives..!

Next Post

"இக்கட்டான சூழலில் கை கொடுத்தீர்கள்.." காதர் மொய்தீனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த CM விஜய்..!

Tue May 12 , 2026
தவெக தலைவர் விஜய் சி. ஜோசப் விஜய் கடந்த 10-ம் தேதி தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.. அவருக்கு ஆளுநர் ஆர்.வி.ஆர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.. விஜய் உடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.. முதலமைச்சர் பதவியேற்பு விழாவுக்கு கோ- சூட்டில் வந்த ஜோசப் விஜய், நேற்று சட்டசபையில் முதல் கூட்டத் தொடரின் முதல் நாளிலும் கோட்- சூட் வந்து பங்கேற்றார்.. மேலும் […]
vijay kadhar moideen

You May Like