சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.. இதில் தவெக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 23 எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர்.. தமிழ்நாடு முன்னாள் சபாநாயகரும், மூத்த நிர்வாகியுமான தனபாலின் மகன் லோகேஷ் தமிழ் செல்வன் இன்று அமைச்சராக பதவியேற்றார்.. இவர் தவெக சார்பில் ராசிபுரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார்..
மகனின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற தனபால் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது “ நான் அதிமுகவில் இருந்து விலகி நீண்ட நாள் ஆகிவிட்டது.. எனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் வீட்டில் ஓய்வில் இருக்கிறேன்.. எனது மகன், இன்று முதல்வர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராகி உள்ளார்.. அதனை பார்க்க வந்தேன்.. நான் பல பதவிகளில் வகித்துள்ளேன்.. என் மகன் அமைச்சரானதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. விஜய் தலைமையில் ஆட்சி அமைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.. ” என்று தெரிவித்தார்.
அதிமுகவில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து தனபாலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த அவர் ” அதிமுகவில் பல வழிகளில் என்னை புறக்கணித்தனர்.. எனக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.. அம்மாவுக்கு பின் எனக்கு எந்த முக்கியத்துவம் தரவில்லை.. நான் அதனால் அதிமுகவில் இருந்து விலகி, உடல்நிலை சரியில்லாதால் வீட்டில் ஓய்வில் இருக்கிறேன்..
இபிஎஸ் செய்த தவறுக்கு இப்போது அனுபவிக்கின்றனர்.. இபிஎஸ் எல்லோரையும் புறக்கணித்தார்.. இன்று மக்கள் அவர்களை புறக்கணித்தனர்.. அதிமுகவின் இன்றைய நிலை வருத்தம் அளிக்கிறது..” என்று தெரிவித்தார்..



