முதல்வர் விஜய் கொடுத்த சூப்பர் ஆஃபர்..! எவ்வளவோ சொல்லியும் திட்டவட்டமாக NO சொன்ன திருமா..!

Vijay and Thirumavalavan

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும், ஆட்சி அமைக்க தேவையான தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.. இதனால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் தவெகவுக்கு ஆதரவளித்தன.. இதில் காங்கிரஸ் கட்சிக்கு முதலில் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டது.. பின்னர் விஜய்யின் கோரிக்கையை ஏற்று விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகளும் அமைச்சரவையில் இணைய சம்மதம் தெரிவித்தன..


அதன்படி தவெக அமைச்சரவையில் விசிகவின் வன்னியரசும், ஐயூஎம்எல் கட்சியின் ஷாஜகானும் அமைச்சராக நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.. வன்னிஅரசுக்கு சமூக நீதித்துறையும், ஷாஜகானுக்கு சிறுபான்மையின நலத்துறையும் ஒதுக்கப்படுள்ளது..

இந்த நிலையில் திருமா அமைச்சரவையில் இணைய வேண்டும் என்று முதல்வர் தரப்பு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறதாம்.. விசிகவுக்கு 1 அமைச்சர் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 வாரிய தலைவர் பதவி கொடுக்க முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளார்.. சிந்தனை செல்வன் மற்றும் இன்னொருவருக்கு வாரிய தலைவர் கொடுக்கப்பட உள்ளதாம்.. இப்போது வன்னிஅரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இலாகாவில் விசிகவுக்கு திருப்தி இல்லையாம்.. ஆனால் திருமாவளவன் அமைச்சரவைக்குள் வந்தால் கேட்கும் துறை கொடுக்கப்படும் என்று முதல்வர் விஜய் சொன்னாராம்..

எனினும் திருமா இந்த ஆஃபரை ஏற்க மறுத்துவிட்டார்.. ஆட்சியில் நானே பங்கெடுத்தால், இதற்காக தான் உங்களுக்கு ஆதரவு கொடுத்தேன் என்று என் மீது குற்றச்சாட்டு வரும் என்று விஜய்யிடமே நேரடியாக திருமா சொல்லிவிட்டாரம்.. அமைச்சர் பதவி மேல் எனக்கு என்றைக்குமே ஆர்வம் இல்லை என்றும் திருமா கூறிவிட்டாராம்..

ஆனாலும் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திருமா நிற்க வேண்டும் முதல்வர் விஜய் தரப்பில் இருந்து தொடர்ந்து வற்புறுத்தி வருகிறாராம்.. .. அதனால் தான் திருமா தீவிரமாக யோசித்து வருகிறார் என்று அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.. எனவே திருமா அமைச்சரவையில் இணைவாரா? அல்லது எம்.பியாகவே தொடர்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..

Read More : திருமாவிடம் ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும்.. தரம் தாழ்ந்து விமர்சிப்பது சரியல்ல..! அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கண்டனம்..!

English Summary

It is reported that the Chief Minister’s camp is continuously exerting pressure on Thiruma to join the cabinet.

RUPA

Next Post

உங்கள் டெபிட் கார்டு ATM-மில் சிக்கிக்கொண்டதா? உடனடியாக இதை செய்யுங்கள்..!

Sat May 23 , 2026
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், நம்மில் பலர் பணம் எடுப்பதற்கு ஏடிஎம் (ATM) இயந்திரங்களையே பெரிதும் சார்ந்திருக்கிறோம். இருப்பினும், பரிவர்த்தனை வெற்றிகரமாக முடிவடைந்த பிறகும், சில சமயங்களில் நமது அட்டை (Card) ஏடிஎம் இயந்திரத்திற்குள்ளேயே சிக்கிக்கொள்வதுண்டு. இத்தகைய சூழ்நிலையில் பலர் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகின்றனர். இதுபோன்ற சூழலில் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். எதிர்காலத்தில் எப்போதாவது நீங்கள் இதேபோன்ற சூழ்நிலையை எதிர்கொண்டால், பதற்றமடையத் தேவையில்லை. உங்கள் […]
atm 1 1

You May Like