“நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்.. அதிமுக ஒன்றுபட்டு விட்டது..” இபிஎஸ் உடன் இணைந்த பின் எஸ்.பி.வேலுமணி பேட்டி..!

eps sp velumani

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுகவில் கடும் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது.. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் தலைமையிலான அணி, கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி என அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ளது..


சட்டமன்றத்தில் கடந்த 13-ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக அதிமுகவை சேர்ந்த 25 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்.. அதுமட்டுமின்றி தவெகவுக்கு ஆதரவளித்த அதிமுக எம்.எல்.ஏக்களை மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் இபிஎஸ் தரப்பு சபாநாயகரிம் மனு அளித்திருந்தது..

இருதரப்பு மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில் இன்று மீண்டும் ஒன்றிணைந்துவிட்டனர்.. இன்று, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் சென்று சந்தித்தனர்.. கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கடிதம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது..

அவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் எஸ்.பி. வேலுமணி தரப்பு மீண்டும் இபிஎஸ் தரப்புடன் இணைந்தது. இதனால் சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது..

இபிஎஸ், எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் இணைந்ததை அடுது அதிமுக எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 42ஆக உயர்ந்துள்ளது.. மேலும் இன்று தலைமை செயலகம் சென்று சபாநாயகரை சந்தித்த அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டமன்ற குழு தலைவர், கொறடா தொடர்பாக அளித்த மனுக்களை திரும்ப பெற்றனர்.. கட்சி தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அளித்த மனுக்களும் சபாநாயகரிடம் இருந்து திரும்ப பெறப்பட்டது..

இந்த நிலையில் எஸ்.பி. வேலுமணி தலைமை செயலகத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது, அதிமுக ஒன்றிணைந்துவிட்டதாக கூறினார்.. தொடர்ந்து பேசிய அவர் “ நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது.. இதையடுத்து சில கருத்துகளை நாங்கள் சொன்னோம்.. சட்டமன்றத்திலே ஆளுங்கட்சி ஆதரவு கொடுத்தோம்.. எங்கள் 25 பேர் மீது இபிஎஸ் தரப்பினர் தகுதி நீக்க மனுக்களை கொடுத்திருந்தொம்.. அவர்களும் எங்களை தகுதி நீக்க மனுவை கொடுத்தனர்.. இந்த இரண்டு தரப்பு தகுதி நீக்க மனுக்களை நாங்கள் வாபஸ் பெற்றுவிட்டோம்..

எங்களுக்குள் இருந்தது கருத்து வேறுபாடு தான், ஆனால் எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்று கூறியிருந்தோம்.. தோல்வி குறித்து ஆராய குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை இபிஎஸ்-இடம் சொன்னோம்.. எங்கள் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக இபிஎஸ் கூறியுள்ளார்.. ஒரு கட்சியில் வெற்றி, தோல்வி சகஜம் தான்.. எங்கள் கட்சியின் தோல்வி குறித்து ஆராய வேண்டும் என்று கூறியுள்ளோம்.. எங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடு நீங்கிவிட்டது.. நாங்கள் ஒற்றுமை உடன் இருக்கிறோம்.. வலுவான அதிமுகவாக செயல்படுவோம்..

அதிமுக என்றைக்கும் மக்களுக்கான இயக்கம்.. அது தொடர்ந்து மக்களுக்காக செயல்படும்.. சி.வி. சண்முகம் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்.. நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்.. எங்களுக்குள் ஒரு பிரச்சனையும் இல்லை.. அதிமுக ஒன்றுபட்டுவிட்டது..” என்று தெரிவித்தார்..

RUPA

Next Post

முடி உதிர்தல் என்பது புற்றுநோயின் அறிகுறியா..? மருத்துவர் சொன்ன உண்மை இதுதான்..!

Wed May 27 , 2026
Many people, when they experience excessive hair loss, immediately fear that it might be a symptom of cancer.
Hairfall

You May Like