Flash : முதல்வர் விஜய், சோனியா காந்தி, ராகுல்காந்தி சந்திப்பு திடீர் ரத்து..! கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட பிளான்..!

cm vijay rahul gandhi

தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் ஜோசப் விஜய் முதன்முறையாக டெல்லி பயணம் செய்துள்ளார்.. 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று டெல்லி சென்ற விஜய், நேற்று மாலை பிரதமர் மோடியை விஜய் சந்தித்தார்.. டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சேவா தீர்த் அலுவலகத்தில் பிரதமர் மோடி – விஜய் சந்திப்பு நடைபெற்றது.. முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் பிரதமர் மோடி உடன் நடைபெற இருக்கும் முதல் சந்திப்பு இதுவாகும்.. அப்போது தேர்தலில் பெற்ற வெற்றிக்காக முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்..


இந்த சந்திப்பின் போது தமிழ் தாய் வாழ்த்து, மேகதாது அணை உள்ளிட்ட 4 முக்கிய கோரிக்கைகளை விஜய் பிரதமரிடம் முன்வைத்தார்.. இதை தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் முதல்வர் விஜய் இன்று சந்தித்தார்.. அப்போது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், இரயில்வே திட்டங்கள், தொழில் வழித்தடங்கள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டுமென்று முதல்வர் விஜய் கோரிக்கை விடுத்தார்..

நேற்றிரவு டெல்லியில் தங்கிய முதல்வர் விஜய் இன்று காலை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோரை சந்திக்க திட்டமிட்டிருந்தார்.. அதன்பின்னர் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களையும் விஜய் சந்திக்க திட்டமிட்டிருந்தார்.. இந்த சந்திப்பு முடிந்ததும் நாளை முதல்வர் விஜய் சென்னை திரும்ப உள்ளதாக கூறப்பட்டது…

இந்த நிலையில் சோனியாகாந்தி, ராகுல் காந்தி உடனான முதல்வர் விஜய்யின் சந்திப்பு ரத்து என தகவல் வெளியாகி உள்ளது.. அதன்படி இன்று டெல்லியில் சோனியாகாந்தி, ராகுல்காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது..

இன்று சோனியா, ராகுலை சந்திக்க நேரம் கேட்டிருந்த நிலையில் தற்போது இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.. இன்று காலை 10 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெற திட்டமிட்டிருந்தார்.. ஆனால் முதல்வர் அவசரமாக சென்னை திரும்புவதால் காங்கிரஸ் தலைவர்கள் உடனான சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. முதல்வர் விஜய் இன்று காலை 10 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்பட்டு, 12 மணியளவில் சென்னை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது..

Read More : தமிழ் தாய் வாழ்த்துக்கு பிரதமரிடம் அனுமதியா..? மாநில உரிமையை அடமானம் வைக்கும் செயல்.. CM விஜய்யை சாடிய EX. சபாநாயகர்..!

English Summary

Reports have emerged stating that Chief Minister Vijay’s meeting with Sonia Gandhi and Rahul Gandhi has been cancelled.

RUPA

Next Post

Breaking : குட்நியூஸ்.. ஒரே நாளில் ரூ.1,200 சரிவு.. தலைகீழாக மாறிய தங்கம், வெள்ளி விலை..!

Thu May 28 , 2026
In Chennai today, the price of ornamental gold has dropped by Rs. 1,200 per sovereign and is being sold at Rs. 1,16,000.
Gold Jewellery

You May Like