Breaking : குட்நியூஸ்.. ஒரே நாளில் ரூ.1,200 சரிவு.. தலைகீழாக மாறிய தங்கம், வெள்ளி விலை..!

Gold Jewellery

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 குறைந்து, ரூ.1,16,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.150 குறைந்து ரூ.14,500-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.1200 குறைந்து, ரூ.1,16,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

அதே போல் இன்று வெள்ளி விலையும் அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.285க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2.85 லட்சத்திற்கு விற்பனையாகிறது..

Read More : Flash : முதல்வர் விஜய், சோனியா காந்தி, ராகுல்காந்தி சந்திப்பு திடீர் ரத்து..! கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட பிளான்..!

English Summary

In Chennai today, the price of ornamental gold has dropped by Rs. 1,200 per sovereign and is being sold at Rs. 1,16,000.

RUPA

Next Post

அதிமுகவில் விழுந்த அடுத்த விக்கெட்.. முன்னாள் அமைச்சர் தவெகவில் இணைந்தார்..!

Thu May 28 , 2026
Former Minister Vellamandi Natarajan joined the TVK.
vellamandi natarajan tvk

You May Like