தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் ஜோசப் விஜய் முதன்முறையாக டெல்லி பயணம் செய்தா.. 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று டெல்லி சென்ற விஜய், நேற்று மாலை பிரதமர் மோடியை விஜய் சந்தித்தார்.. டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சேவா தீர்த் அலுவலகத்தில் பிரதமர் மோடி – விஜய் சந்திப்பு நடைபெற்றது.. முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் பிரதமர் மோடி உடன் நடைபெற இருக்கும் முதல் சந்திப்பு இதுவாகும்.. அப்போது தேர்தலில் பெற்ற வெற்றிக்காக முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்..
இந்த சந்திப்பின் போது தமிழ் தாய் வாழ்த்து, மேகதாது அணை உள்ளிட்ட 4 முக்கிய கோரிக்கைகளை விஜய் பிரதமரிடம் முன்வைத்தார்.. இதை தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் முதல்வர் விஜய் இன்று சந்தித்தார்.. அப்போது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், இரயில்வே திட்டங்கள், தொழில் வழித்தடங்கள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டுமென்று முதல்வர் விஜய் கோரிக்கை விடுத்தார்..
நேற்றிரவு டெல்லியில் தங்கிய முதல்வர் விஜய் இன்று காலை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோரை சந்திக்க திட்டமிட்டிருந்தார்.. ஆனால் இந்த சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டது.. முதல்வர் அவசரமாக சென்னை திரும்புவதால் காங்கிரஸ் தலைவர்கள் உடனான சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
இதையடுத்து சென்னை திரும்புவதற்காக முதல்வர் விஜய் தமிழ்நாடு இல்லத்தில் இருந்து புறப்பட்ட விஜய் காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.. அதை ஏற்றுக்கொண்டு புறப்பட்ட முதல்வர் விஜய்யிடம் செய்தியாளர்கள் பல கேள்விகளை முன்வைத்தனர்.. டெல்லி பயணம் எப்படி இருந்தது, ராகுல்காந்தியை ஏன் சந்திக்கவில்லை என்பது உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பினர்.. ஆனால் அந்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தனது காரில் ஏறி முதல்வர் விஜய் புறப்பட்டார்..
காரில் ஏறும் வரை தொடர் கேள்விகளை செய்தியாளர்கள் அடுக்கினர்.. டெல்லி வந்தால் தமிழக முதல்வர்கள் செய்தியாளர்களை சந்திப்பது மரபு.. அந்த மரபை உடைக்காதீங்க சார் என்று ஒரு செய்தியாளர்கள் கூறினார்.. ஆனால் செய்தியாளர்களை புறந்தள்ளிவிட்டு விஜய் கிளம்பிவிட்டார்..
விஜய் செய்தியாளர்களை தவிர்ப்பது இது முதன்முறையல்ல.. கட்சி தொடங்கியது முதலே அவர் செய்தியாளர்களை சந்தித்ததே இல்லை.. தேர்தலில் வெற்றி பெற்ற முதல்வரான பின்னர் கூட விஜய் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கவில்லை.. விஜய் செய்தியாளர்களை சந்திக்க மறுக்கிறார் என்ற விமர்சனமும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது..
தமிழக முதல்வர்கள் டெல்லி சென்றால் பேட்டி அளிப்பது மரபு.. முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி என அனைவரும் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து விட்டு தான் தமிழ்நாடு திரும்புவார்கள்.. ஆனால் முதல்வர் விஜய் மட்டும் செய்தியாளர்களை புறந்தள்ளி தமிழகம் புறப்பட்டார்.. டெல்லி செய்தியாளர் சந்திப்பு என்பது ஒட்டுமொத்த இந்தியா உடனும் பேசுவதற்கான வாய்ப்பாகவே கருதப்படுகிறது.
தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநில தலைவர்களும் டெல்லியில் செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம். கேரளம், ஆந்திரா, தெலங்கானா, மேற்குவங்க முதல்வர்கள் டெல்லியில் இருந்து செய்தியாளர்களை சந்தித்து விட்டு தான் தங்கள் மாநிலங்களுக்கு கிளம்புவார்கள்.. மாநில நலன் குறித்து தேசிய ஊடகங்களில் பேசுவது முக்கியத்துவம் பெறும் என்பதை கருத்தில் கொண்டே நாட்டில் பல மாநில முதல்வர்களும் செய்தியாளர்களை சந்திப்பார்கள்..
ஆனால் தமிழக முதல்வர் விஜய் டெல்லியில் செய்தியாளர்களை புறக்கணித்திருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.. ஏனெனில் டெல்லி சந்திப்பில் என்ன நடந்தது என்று மக்களுக்கு விளக்க வேண்டிய கட்டாயம் விஜய்க்கு உள்ளது என்றும், செய்தியாளர்களை சந்திக்க மறுப்பது, மக்களுக்கு நான் பதில் சொல்ல அவசியம் இல்லை என்பதற்கு சமம் என்றும் அரசியல் விமர்சகர்கள் காட்டமாக விமர்சித்துள்ளனர்..
Read More : அதிமுகவில் விழுந்த அடுத்த விக்கெட்.. முன்னாள் அமைச்சர் தவெகவில் இணைந்தார்..!



