BREAKING| 717 மதுபான கடைகளை 2 வாரங்களுக்குள் மூட உத்தரவு..! – முதலமைச்சர் விஜய் அதிரடி..

cm vijay 2

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழகத்தில் 717 மதுபான கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூட அதிரடி உத்தரவிட்டுள்ளார்.


தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு தொடர்பான வாக்குறுதிகள் முக்கிய இடத்தை பெற்றிருந்தன. அதனை முன்னெடுத்து, கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை சுற்றி  500 மீட்டர் வரை உள்ள 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இது மாநிலம் முழுவதும் மதுவிலக்கு கொள்கையை வலுப்படுத்தும் முதல் கட்ட நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய், முதல் 3 கையெழுத்திலேயே போதைக்கு எதிராக ஆதரவை தெரிவித்தார். இந்த நிலையில்,  வழிபாட்டு தலங்கள் அருகே உள்ள 276 கடைகளும், கல்வி நிலையங்கள் அருகே உள்ள 186 கடைகளும், பேருந்துநிலையம் அருகே அமைந்துள்ள 255 கடைகள் என மொத்தம் 717 மதுபான கடைகளை அடுத்த 2 வாரத்திற்குள் மூடுமாறு முதலமைச்சர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய்யின் இந்த அதிரடி நடவடிக்கை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Read more: ஜெயலலிதாவால் அவமானப்படுத்தப்பட்ட விஜய்.. அன்று கடைசி வரிசை.. இன்று முதல்வர் இருக்கை..! 2013-ல் என்ன நடந்தது..?

English Summary

717 liquor shops ordered to close within 2 weeks..! – Chief Minister Vijay takes action..

Next Post

வீடுகளில் சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைக்க மோடி அறிவுரை.. காரணமும் மாற்று வழிகளும் என்ன..?

Tue May 12 , 2026
Why PM Asked Households To Cut Use Of Cooking Oil And What's The Alternative
c2o1mmn4 pm modi vegetable oil 625x300 11 May 26 1

You May Like