தவெகவில் இணைகிறேனா..? இறுதி முடிவு இதுதான்..! முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பரபரப்பு பேட்டி..!

vijayabaskar

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பினர் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், எஸ்.பி. வேலுமணி – சி.வி சண்முகம் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டது.. இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமூக முடிவு எட்டப்பட்ட நிலையில் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணி இபிஎஸ் அணியில் இணைந்து ஒரே அணியாக செயல்பட தொடங்கி உள்ளனர்.. எனினும் சி.வி. சண்முகம் மட்டும் இபிஎஸ் உடன் இணையவில்லை.. அவருடன் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது..


இதனிடையே மதுராந்தகம், பெருந்துரை, தாராபுரம், அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.. சி.வி. சண்முகமும் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது..

மேலும் பல அதிமுக நிர்வாகிகள் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்பட்டது.. அதன்படி, வெல்லமண்டி நடராஜன், அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகள் பலரும் இணைந்தனர்..

இந்த சூழலில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இன்று காலை முதல் புதுக்கோட்டையில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்கள், நிர்வாகிகள், பொதுமக்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.. அதிமுகவில் தொடர்வதா அல்லது தவெகவில் இணைவதா என்பது குறித்து அவர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது..

இந்த நிலையில் சி.விஜயபாஸ்கர் தனது நிலைப்பாடு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.. புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ எம்.ஜி.ஆர். ஜெயலலிதா வழியில் தொடர்ந்து பயணிக்கிறேன்.. அதே நேரம் எனது முன்னிரிமை எனது தொகுதி மக்கள்.. இந்த மாபெரும் அலையில் கூட 62,000 வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி உடையவனாக இருப்பேன்.. எனக்கு வாக்களித்த விராலிமலை தொகுதி மக்களின் நலனே எனக்கு முன்னிரிமை.. என் மக்களின் நம்பிக்கை நான் காப்பாற்ற வேண்டும்.. எனக்காக உழைத்த ஆதரவாளர்கள், நிர்வாகிகள் கூறிய கருத்துகளை பொறுமையாக கேட்டிருக்கிறேன்.

நான் மிகவும் நிதானமாக பொறுமையாக இருக்கிறேன்.. நிர்வாகிகள், ஆதரவாளர்கள் நிறைய கருத்துகளை சொன்னார்கள்.. இளைஞர்கள், பெண்கள் அதிகளவில் திரண்டு வந்து கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.. 25 ஆண்டுகாலம் நான் பொதுவாழ்க்கையில் பயணித்திருக்கிறேன்.. கொரோனா காலத்தில் என் உயிரையும் துச்சமென நினைத்து தமிழக மக்களுக்காக பணியாற்றி இருக்கிறேன்..

தொடர்ந்து மக்களுக்கு பணியாற்றவே விரும்புகிறேன்.. மக்கள் என்ன நினைக்கிறார்கள் அது தான் என் முடிவு..” என்று தெரிவித்தார்..

தவெகவில் இணையப் போவதாக கூறுவது வெறும் யூகம் தான் என்றும் அவர் தெரிவித்தார்.. மக்கள் சொன்ன கருத்துகளை உள்வாங்கி இருக்கிறேன்.. தொகுதி மக்கள் என்ன விரும்புகிறார்களோ அந்த நம்பிக்கையை காப்பாற்றுவேன்.. எனக்காக கட்சியில் உழைத்தவர்கள் என்ன நினைக்கிறார்களோ அது தான் என் முடிவாக இருக்கும்.. இந்த மாதிரியான நேரத்தில் மக்களின், நிர்வாகிகளின் கருத்துகளை கேட்காமல் முடிவெடுக்க முடியாது..” என்று தெரிவித்தார்..

Read More : அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து.. முழு பெட்டியும் சாம்பலானது.. பீகாரில் பெரும் பரபரப்பு..!

English Summary

Former Minister C. Vijayabaskar has issued a clarification regarding reports that he is set to join the TVK.

RUPA

Next Post

Breaking : முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் சித்தராமையா..! புதிய முதல்வராகும் டி.கே.சிவக்குமார்..! எப்போது பதவியேற்பு..?

Thu May 28 , 2026
Karnataka Chief Minister Siddaramaiah has resigned from his post.
siddharamaiaah dk shivkumar

You May Like