தவறு செய்தவர்களை தண்டித்தால் நீங்க ஏன் பதறுறீங்க..? அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி..!

AnithaRAmesh

நேற்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.. அப்போது அமைச்சரிடமே விஐபி தரிசனத்திற்கு அழைத்து செல்வதாக அர்ச்சகர்கள் ரூ. 4000 கேட்டுள்ளளனர். ஆனால் தன் கையில் பணம் இல்லை என்று அமைச்சர் ரமேஷ் கூறிய நிலையில் ஜிபேயில் அனுப்ப்புங்கள் என்று கூறி வசூல் செய்துள்ளனர்.. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது..


இதையடுத்து விரைவு தரிசனத்திற்காக பணம் பெற்ற அர்ச்சகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.. மேலும் அர்ச்சகருடன் சேர்ந்து முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்த 2 பாதுகாவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.. அதே போல் முடி காணிக்கை செலுத்த வந்த பக்தர்களிடம் பணம் கேட்ட 2 பணியாளர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்..

இந்த சூழலில் திருச்செந்தூர் கோயிலின் புகழை சிறுமைபடுத்திய அமைச்சர் ரமேஷுக்கு திருச்செந்தூர் எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்திருந்தார்.. திருச்செந்தூரில் ஆய்வு என்ற பெயரில் அமைச்சர் ரமேஷ், அர்ச்சகர்களை இழிவுபடுத்தி உள்ளார் என்று கூறியிருந்தார்..

மேலும் “ அர்ச்சகர்கள் மரபுவழி பொறுப்பை நிறைவேற்றி வருகின்றனர்.
அறநிலையத் துறையை சார்ந்தவர் அல்லாத திருசுதந்திர அர்ச்சகர்கள் காலம் காலமாக மரபுவழியாக இந்த சுவாமி தரிசன உதவியை செய்து வருகின்றனர். பக்தர்கள் தரும் தட்சனையை பெறுகின்றனர். இந்த நிலையில் திருசுதந்திர அர்ச்சகர்கள் செய்யும் ஆன்மீக பணியை இழிவு படுத்தியுள்ளார் அறநிலையத் துறை அமைச்சர் திரு.ரமேஷ் ஐய்யங்கார் அவர்கள்.

அறநிலையத் துறை அமைச்சரின் இந்த செயல் திருசுதந்திர அர்ச்சகர் சமுதாயத்தினரிடம் பெரும் மன வேதனையை ஏற்ப்படுத்தியுள்ளது. மேலும் உள்ளூர் மக்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கான வழிமுறை பற்றிய எந்த அறிவிப்பும் வெளியிடாதது சரியானதல்ல என்று ஊர் மக்கள் கருதுகின்றனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் புகழை சிறுமைப்படுத்திய அறநிலையத்துறை அமைச்சர் திரு.ரமேஷ் ஐயங்கார் அவர்களுக்கு எனது வன்மையான கண்டனத்தை மீண்டும் அழுத்தமாக பதிவு செய்கிறேன்.” என்று கூறியிருந்தார்..

இந்த நிலையில் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ மாண்புமிகு திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.அனிதா R.ராதாகிருஷ்ணன் அவர்களே (உங்களை போல் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் போடும் வழக்கம் உண்மையில் பெரியாரை பின்பற்றுவர்களுக்கு கிடையாது) மக்களை சுரண்டி பிழைப்பது யாராக இருந்தாலும் சாதி மத பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்க தான் மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர்.

பக்தர்களிடம் சட்டத்துக்கு புறம்பாக பணம் பெற்றுதான் சேவை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை, அப்படி செய்வது சேவையும் இல்லை, அதை எந்தக் கடவுளும் செய்ய சொல்லவும் இல்லை. நேற்று வரை சாதியை வைத்து ஆதரவாக செயல்படுகிறேன் என்று திமுகவினர் பேசினீர்கள். இன்று அதே சாதியை சார்ந்தவர்களை அவமதித்து விட்டதாக பேசுகிறீர்கள்.

தவறு செய்தவர்களை தண்டித்தால் தங்களுக்கு எதற்காக திடீர் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது என்பது தெரியவில்லை. இன்னும் பல முறைகேடுகள் திருச்செந்தூர் திருக்கோயிலில் நடந்து வருவதை விரைவில் வெளிக்கொணர்வேன், அதில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். அது யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்!” என்று குறிப்பிட்டுள்ளார்..

RUPA

Next Post

திருப்பரங்குன்றம் கோயிலில் 87 பேர் மயக்கமா..? கோயில் நிர்வாகம் பரபரப்பு விளக்கம்..!

Sat May 30 , 2026
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.. வைகாசி விசாகத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்யத் திரண்டதால் கடுமையான கூட்ட நெரிசலும், அதனுடன் வெயிலின் தாக்கமும் சேர்ந்து இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் திருப்பரங்குன்றம் கோயிலில் 87 பேர் மயக்கமடைந்ததாகவும், மயக்கமடைந்த 87 பக்தர்களுக்கும் கோயிலின் தேவசேனா மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவ முகாமில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது […]
thiruparangundram 2

You May Like