கடந்த சில நாட்களாகவே அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கப் போவதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.. இந்த சூழலில் முதன்முறையாக மத்திய அரசுக்கு எதிராக ஒரு பதிவை அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.. மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராக அவர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.. இதன் மூலம் பாஜக மேலிடத்திற்கும் அன்ணாமலைக்கும் இடையேயேன மோதலை காட்டியது..
இதையடுத்து அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறாரா என்ற யூகம் வலுப்பெற்றுள்ளது.. பாஜகவின் முக்கிய நபராக கருதப்பட்ட அண்ணாமலையில் இந்த திடீர் திட்டம், தமிழக அரசியலில் புதிய களத்தை உருவாக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றன..
பாஜக மேலிடத்தில் தனக்கு போதிய ஆதரவு கிடைக்காததால், அண்ணாமலை தனக்கென தனி அரசியல் கட்சியை தொடங்க முடிவு செய்ததாகவும் தெரிகிறது.. அதற்கான முதல்கட்ட நடவடிக்கையையும் அண்ணாமலை தொடங்க உள்ளார்.. மேலும் தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த பரபரப்பான சூழலில் அண்ணாமலை இன்று டெல்லிக்கு சென்றூள்ளார்.. டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து தனது முடிவை அறிவிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.. தனது நிலைப்பாட்டை எடுத்து சொல்லி, பாஜகவில் இருந்து விலக உள்ளதாகவும் கூறப்படுகிறது..
புதிய கட்சி தொடங்கும் பணிகளை அண்ணாமலை தொடங்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.. தனது பிறந்தநாளான ஜூன் 4-ம் தேதி புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை அண்ணாமலை வெளியிடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டார்.. அப்போது பாஜக கொடி இல்லாத காரில் சென்னை விமான நிலையத்திற்கு அவர் வருகை தந்தார்.. வழக்கமாக பாஜக கொடி இருக்கும் வாகனத்தில் செல்லும் அவர் இந்த முறை பாஜக கொடி இல்லாத வாகந்த்தில் வருகை தந்தார்.. விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ 2 நாட்களில் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்கிறேன். அனைத்துக் கேள்விகளுக்கும் 2 நாட்களில் பதில் சொல்கிறேன். 2 நாட்களில் முறையாக பேசுகிறேன்.. உட்கார்ந்து பொறுமையாக பேசுவோம்.. எல்லா கேள்விகளுக்கும் நான் பதில் சொல்கிறேன்..” என்று தெரிவித்தார்..
Read More : “நான் கருப்பு கலர் கோட் சூட் போட இதுதான் காரணம்..” விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த முதல்வர் விஜய்.!



