தூய்மையான எரிசக்தியை ஊக்குவிப்பதற்கும், இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும் மத்திய அரசு ஒரு முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.. அதாவது, அதிக அளவு எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை அரசு ரத்து செய்துள்ளது. இதன் மூலம் தற்போதைய E20 தரநிலையைத் தாண்டி வரிச் சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, 22%, 25%, 27% மற்றும் 30% எத்தனால் கலக்கப்பட்ட எரிபொருட்களுக்குக் கலால் வரி ஏதுமிருக்காது. நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, குறிப்பிட்ட நான்கு உயர்-கலவை எரிபொருள் வகைகளுக்குக் கலால் வரியை முழுமையாக விலக்குவதற்காக, ஜூன் 2017-ல் வெளியிடப்பட்ட முதன்மை கலால் வரி அறிவிப்பில் அரசு திருத்தம் செய்துள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.. அதில் “22% எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் என்பது கனஅளவு அடிப்படையில், உரிய கலால் வரி செலுத்தப்பட்ட 78% மோட்டார் ஸ்பிரிட் (பொதுவாக பெட்ரோல் என்று அழைக்கப்படுகிறது) மற்றும் உரிய மத்திய வரி, மாநில வரி, யூனியன் பிரதேச வரி அல்லது ஒருங்கிணைந்த வரி (சூழலுக்கு ஏற்ப) செலுத்தப்பட்ட 22% எத்தனால் ஆகியவற்றைக் கொண்ட கலவையாகும்.. இது இந்தியத் தரநிலைகள் அமைப்பின் (BIS) IS 19850 விவரக்குறிப்புக்கு இணங்கக்கூடியதாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
Read More : கேஸ் சிலிண்டர் பயனர்கள் கவனத்திற்கு..! இந்த விஷயம் தெரியாவிட்டால், நீங்கள் பணத்தை இழக்க நேரிடும்..!



