தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்த விஜய், சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.. போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்றார்..
தமிழ் சினிமாவில் இருந்து பல நடிகர்கள் கட்சி தொடங்கி அரசியலுக்கு வந்தாலும் எம்.ஜி.ஆருக்கு சினிமாவில் இருந்து பல நடிகர்கள் கட்சி தொடங்கி அரசியலுக்கு வந்தாலும் எம்.ஜி.ஆருக்கு பின் ஆட்சியை பிடித்தவர் விஜய் தான்.
இந்த சூழலில் விஜய்யை அடுத்து நடிகர் சூர்யாவும் அரசியலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியானது. தமிழ் சினிமாவின் மற்றொரு முன்னணி நடிகரான தந்தை சிவகுமாரை பின்பற்றி சினிமாவுக்கு வந்தவர்.
படிப்படியாக வளர்ந்து இன்று தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகராக திகழ்கிறார். நடிகர் என்பதை தாண்டி கல்விக்கு சூர்யா ஆற்றி வரும் தொண்டு தமிழகம் முழுவதும் அறிந்தது தான்.. அகரம் என்ற அறக்கட்டளை மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்களை படிக்க வைத்து வருகிறார்..
சூர்யாவின் இந்த கல்வி சேவையை முன்னுறுத்தி அவ்வ்ப்போது அவரை ரசிகர்கள் அரசியலுக்கு அழைப்பதுண்டு. இந்த சூழலில் அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது..
இதில் பேசிய நிர்வாகி ஒருவர் “ காலம் முடிவு செய்துவிட்டது.. கடவுள் முடிவு செய்துவிட்டார். அவர் மக்கள் தலைவராக வருவதை யாராலும் தடுக்க முடியாது. சூர்யா அண்ணனுக்காக நீங்கள் உழைக்க தயாராக இருக்கிறீர்களா..? உழைக்க நீங்கள் தயார் என்றால் நடிகர் சூர்யா விரைவில் மக்கள் தலைவராக வருவார். அதை யாராலும் தடுக்க முடியாது..” என்று தெரிவித்தார். இந்த வீடியோவை வைரலான நிலையில் நடிகர் சூர்யாவும் அரசியலுக்கு வருகிறாரா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து அந்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ 28.06.2026 அன்று நடைபெற்ற மாநில-மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட திரு. இரா.வீரமணி அவர்கள். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து’ என்று தெளிவாகக் குறிப்பிட்ட பின்னரே தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
ஆனால், அவரது உரையை தவறான விளக்கத்துடன் சமூக வலைத்தளங்களில் பரப்பி. அது மன்றத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்ற தோற்றத்தை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதனை யாரும் நம்பவோ. பொருட்படுத்தவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக திரு.இரா.வீரமணி அவர்கள் மன்றத்தின் நிர்வாகத்தில் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். அதேபோல், திரு.சூர்யா அவர்களுக்கு அரசியலுக்கு வருவதற்கான எந்தவித எண்ணமும் இல்லை. அகரம் அறக்கட்டளை மற்றும் நற்பணி இயக்கத்தின் மூலமாக மக்களுக்கான சமூகச் சேவைகளை தொடர்ந்து ஆற்றி வருவதே அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்து வருகிறது.
மன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் நிலைப்பாடுகள் செயல் தலைவர் திரு.R.A.ராஜ் மற்றும் அமைப்பாளர் திரு.G.ஹரிராஜ் ஆகியோரின் மூலமாக மட்டுமே வெளியிடப்படும்.
எனவே. சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளை நம்பாமல். மன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



