“மரியாதை கெட்டுப்போகும்..” உச்சக்கட்ட கோபத்தில் சீறிய வைகோ.. என்ன நடந்தது..? Video..!

MDMK Vaiko 2 1

திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சமீபத்த்ல் அறிவித்தார்.. மேலும் தவெகவுக்கு ஆதரவு வழங்குவோம் என்றும் கூறியிருந்தார்.. வைகோவின் இந்த பேச்சை தொடர்ந்து திமுகவினரும் மதிமுகவினரும் மாறி மாறி விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்..


இந்த நிலையில் வைகோ இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் திமுக ஆட்சியில் கலக்‌ஷன், கரப்ஷன், கமிஷன் இருந்ததாக கூறினார்.. அப்போது குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர் கூட்டணியில் இருந்த போது ஏன் இதை சொல்லவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த வைகோ “ கூட்டணியில் இருக்கும் அந்த கட்சியை பற்றி குறை சொல்வது அயோக்கியத்தனம், அரசியல் தர்மம் இல்லை. கூட்டணி தர்மத்திற்காக பேசாமல் இருந்தேன்.. என்று கூறினார்..

இதை தொடர்ந்து செய்தியாளர், கூட்டணியில் இருந்தாலும் கண்டித்திருக்க வேண்டும், கூட்டணியில் இருந்து வெளியேறிய உடன் ஏன் விமர்சனம் செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்..

அப்போது தொடர்ந்து வாக்குவாதம் செய்த வைகோ ஒரு கட்டத்தில் செய்தியாளர்களை நோக்கி ஆவேசமாக பேசினார்.. மேலும் “ உங்களை யார் ஏவிவிட்டது. உங்கள் பத்திரிகை முதலாளி ஏவி விட்டிருக்கிறார்.. நீங்கள் தினகரனா..? அது மஞ்சள் பத்திரிகையாக மாறிவிட்டதே..? உங்களுடைய பத்திரிகை என்னை அரை பக்கத்துக்கு சொத்து வாங்கி இருக்கேன் என்று எழுதி இருக்கிறார்.. நான் கேஸ் போட போகிறேன் நீங்க திட்டமிட்டு இங்கே வந்திருக்கீங்க.. குழப்பம் ஏற்படுத்த இங்கே வந்திருக்கீங்க.. உங்களுக்கு இங்கே வேலை கிடையாது.. வெளியே போங்க.. நீங்க மஞ்சள் பத்திரிகையா..? மரியாதை கெட்டுப்போகும்” என்று ஆவேசமாக பேசினார்..

இதனால் செய்தியாளர்களுக்கும் மதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.. பின்னர் மதிமுகவினர் அந்த செய்தியாளரை வெளியே அனுப்பினர்.

Read More : திருச்சி கிழக்கில் போட்டியில்லை.. ஆனா நான் அரசியலுக்கு வரவில்லை என நினைக்க வேண்டாம்.. மீண்டும் ட்விஸ்ட் வைத்த ராகவா லாரன்ஸ்..!

RUPA

Next Post

ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு.. பழைய செயலி இனி செயல்படாது.. இந்தப் புதிய செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்க..!

Tue Jun 30 , 2026
ஜூன் 30 முதல், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) பயனர்களை பழைய ‘mAadhaar’ செயலியிலிருந்து புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘Aadhaar’ செயலிக்கு மாற்றி வருகிறது. இந்த புதிய செயலி நாடு முழுவதும் வேகமாகப் பிரபலமடைந்து வருகிறது. அறிமுகப்படுத்தப்பட்டு ஐந்து மாதங்களுக்குள்ளேயே 3.1 கோடிக்கும் அதிகமானோர் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளதாக UIDAI தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் அடிப்படையிலான ஆதார் சேவைகளின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருவதை இது காட்டுகிறது. UIDAI-இன் தகவலின்படி, […]
aadhaar card 7

You May Like