ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மணிமங்கலத்தில் உள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக காலையில் செய்தி வெளியானது.
இதுதொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வந்துள்ள நிலையில், வருமான வரித்துறையினர் ஹிந்தி பேசும் அதிகாரிகளைக் கொண்டு ‘சோதனை என்ற பெயரில், ஸ்ரீபெரும்புதூர் சட்டசபை தொகுதிக்குள் என்னை சட்டவிரோதமாக முடக்கியுள்ளனர்.
எனது அரசியல் கடமைகளை செய்ய விடாமல் சோதனை என்ற பெயரில் சிறைபிடித்து வைத்துள்ளனர். மத்திய அமைப்புகளை அரசியல் அழுத்தத்தின் கருவிகளாகப் பயன்படுத்துவது கவலை அளிக்கிறது என பதிவிட்டிருந்தார். அதை தொடர்ந்து திமுக கூட்டணியில் உள்ள பலரும் வருமான வரித்துறையின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியது போல் அவரது வீடு உள்ளிட்ட எங்கும் சோதனை நடத்தவில்லை என வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. ராகுல் காந்தியின் பிரச்சாரத்திற்கு செல்லவிடாமல் தடுத்ததாக செல்வப்பெருந்தகை கூறுவதும் உண்மைக்கு புறம்பானது எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.
Read more: விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி சங்கீதா தொடர்ந்த வழக்கு.. ஜூன் 15 ஆம் தேதி ஒத்திவைப்பு..!



