புதுடெல்லியில் உள்ள ஜகட்புரி பகுதியை சேர்ந்தவர் முஸ்தகீம். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு, இவருக்கும், 20 வயதான அலிஷா என்ற பெண் ஒருவருக்கும் திருமணம் முடிந்துள்ளது. இந்நிலையில், கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று, முஸ்தகீம் இரவு நேரத்தில் உறங்கியபடி உயிரிழந்துவிட்டதாக அலிஷா தகவல் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த முஸ்தகீம் உறவினர்கள் உடனடியாக முஸ்தகீமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், முஸ்தகீம் உயிரிழந்ததை உறுதி செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் அடிப்படையில், போலீசார் சந்தேக மரணம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், போலீசாருக்கு அலிஷாவின் செயல்பாடுகளில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், போலீசார் அலிஷாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அதில் அலிஷா உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். அதாவது, அலிஷாவுக்கு திருமணத்துக்கு முன் வேறொரு நபருடன் காதல் உறவு இருந்துள்ளது. இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அலிஷாவின் பெற்றோர், முஸ்தகீமுக்கு அலிஷாவை திருமணம் செய்து வைத்தனர்.
திருமணத்துக்கு பின்னரும் கணவருடன் வாழ விருப்பம் இல்லாத அலிஷா, காதலருடன் பேசி வந்துள்ளார். இதனால் கனவாம் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அலிஷா முஸ்தகீமை கடந்த 4 மாதங்களுக்கு முன்னரே கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். ஆனால், அதில் முஸ்தகீம் தப்பித்து விட்டார். ஆனால் தற்போது கொலை சம்பவம் நடந்துள்ளது என்பது அம்பலமானது.
இதையடுத்து, போலீசார் அலிஷாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். திருமணமான 7 மாதங்களில் மனைவி கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Also Read: பெற்றோர்களே எச்சரிக்கை!!! அதிக உணவு சாப்பிட்டதால் 7 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்..



