அடிக்கடி இதை சாப்பிடுங்க… உங்களுக்கு ஹார்ட் அட்டாக்கே வராது!

மன அழுத்தம், ஒழுங்கற்ற வாழ்க்கை முறை, அதிக வேகமான வாழ்க்கை, சத்துக்கள் குறைந்த உணவுப் பழக்கம் போன்ற பல காரணங்களால் தற்போது பலருக்கும் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதில் முக்கியமான ஒன்றாக மாரடைப்பு உள்ளது.


முன்பு வயதானவர்களிடம் அதிகம் காணப்பட்ட மாரடைப்பு, தற்போது இளம் வயதினரிடமும் சில சமயங்களில் குழந்தைகளிடமும் கூட ஏற்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதற்கு முக்கிய காரணங்களாக ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை மற்றும் அதிக மன அழுத்தம் போன்றவை கூறப்படுகின்றன.

ஆரோக்கியமான உணவுகளை தினசரி வாழ்க்கையில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். பொதுவாக அனைத்து காய்கறிகளும் உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்குகின்றன. ஆனால், சில குறிப்பிட்ட காய்கறிகள் இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தினசரி உணவில் பசலைக்கீரை, முருங்கைக்கீரை போன்ற பச்சை கீரைகளை சேர்த்துக்கொள்வது உடலுக்கு பல நன்மைகளை தரும். இதில் உள்ள இரும்புச்சத்து, வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவுகின்றன. மேலும், ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும் இவை உதவக்கூடும்.

ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகளில் ஒன்றான ப்ரோக்கோலியில் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இவை உடலில் அதிகரிக்கும் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுவதுடன், இதய பாதிப்புகளுக்கான அபாயத்தையும் குறைக்கக்கூடும்.

சாதாரணமாக பயன்படுத்தப்படும் தக்காளியிலும் இதயத்திற்கு தேவையான முக்கிய சத்துக்கள் உள்ளன. இதில் காணப்படும் லைகோபீன் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட், உடலில் உள்ள செல்களை பாதுகாக்க உதவுகிறது. மேலும், ரத்த நாளங்களின் ஆரோக்கியத்திற்கும் இது பயனுள்ளதாக கருதப்படுகிறது.

கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டீன் மற்றும் நார்ச்சத்து உடலுக்கு பல நன்மைகளை வழங்குகின்றன. இது கொழுப்பின் அளவை சீராக வைத்திருக்கவும், ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதால் ஏற்படும் பிரச்சனைகளை குறைக்கவும் உதவுகிறது.

பாரம்பரியமாக பல்வேறு மருத்துவ பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் பூண்டு, இதய ஆரோக்கியத்திற்கும் உதவக்கூடிய உணவாக கருதப்படுகிறது. இது ரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திருக்கவும், சீரான ரத்த ஓட்டத்திற்கு உதவவும் பயன்படுகிறது. பீட்ரூட்டில் உள்ள இயற்கையான நைட்ரேட்டுகள் ரத்த நாளங்கள் விரிவடைய உதவுகின்றன. இதனால் உடலில் ரத்த ஓட்டம் மேம்பட்டு, இதயத்தின் செயல்பாடு சிறப்பாக இருக்க உதவுகிறது.

இதய ஆரோக்கியத்திற்கு நல்ல உணவுகளை சாப்பிடுவது மட்டுமின்றி, ஆரோக்கியமான பழக்கங்களையும் பின்பற்ற வேண்டும். தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்வது, அதிக எண்ணெய் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது அவசியம். புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கம் இருந்தால் அதனை குறைப்பது அல்லது முற்றிலும் தவிர்ப்பது நல்லது. அதேபோல், போதுமான தூக்கம், மன அழுத்தத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதும் உடலுக்கு முக்கியம்..

Also Read: எவ்வளவு சுத்தம் செய்தாலும் பாத்ரூம் பக்கெட்டில் படிந்த உப்புக் கறை போகலையா? இதை ட்ரை பண்ணுங்க புதுசு மாதிரி மாறிடும்!

Saranya

You May Like