தெலங்கானா மாநிலம், சூர்யபேட்டையை சேர்ந்தவர் நகிரிகாந்தி ரவி. லாரி ஓட்டுநரான இவருக்கு இந்து என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு, 5 வயதான தனுஷ் மற்றும் 2 வயதான ரேவந்த் என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இவர்களின் வீட்டில் இருந்து அடிக்கடி குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு மற்றும் சைல்ட்லைன் அதிகாரிகள் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது குழந்தைகளின் அலறல் சத்தம் அடிக்கடி கேட்பது உறுதியானது. இதையடுத்து, உடனடியாக நகிரிகாந்தி ரவி வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு இரு குழந்தைகளின் உடலில் தீயினால் சுட்ட காயங்கள், நகக்கீறல்கள், அடித்ததால் ஏற்பட்ட தழும்புகள் என இருந்துள்ளது. மேலும், 2 வயது குழந்தைக்கு இடது கை மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அதிகரிகள், இரு குழந்தைகளையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து நகிரிகாந்தி ரவி மற்றும் இந்து ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது, “ஏற்கனவே திருமணமான ரவி, தனது முதல் மனைவியிடமிருந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்துள்ளார். பின்னர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்ற இந்துவை திருமணம் செய்துள்ளார்.
இதில் முதல் மகன், தனது முதல் கணவருக்கு பிறந்தவன். இந்நிலையில், தாங்கள் உல்லாசமாக இருப்பதற்கு 2 குழந்தைகளும் தடையாக இருப்பதாக கருதியுள்ளனர். இதனால் விரக்தியில் குழந்தைகளை சரமாரியாக தாக்கியதாகவும், கரண்டியை பழுக்கக் காய்ச்சி மீண்டும் மீண்டும் சூடு போடுதல், சிகரெட்டால் சூடு வைத்தல், வார்த்தைகளால் காயப்படுத்துதல் போன்ற கொடூர செயல்களில் ஈடுபட்டனர் என தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பிஎன்எஸ் சட்டத்தின்படி சிறார் நீதி மற்றும் குழந்தைகள் பரமாரிப்பு, பாதுகாப்பு பிரிவின் கீழ் தாய் மற்றும் தந்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிகிச்சை பெற்ற குழந்தைகள் சூர்யபேட்டையில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். பலரும் குழந்தைகளுக்காக தவம் கிடக்கும் நிலையில் அற்ப சந்தோசத்திற்காக பெற்ற பிள்ளைகளை கொடூரமாக சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..
Also Read: தாயுடன் கள்ளத்தொடர்பு.. தட்டிக்கேட்ட மகன்கள்.. இறுதியில் நடந்த அதிர்சி சம்பவம்..



