பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், இளம்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு சில பொருள்களை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். இந்நிலையில், இவர் ஆர்டர் செய்த பொருள்களை கொடுப்பதற்கு டெலிவரி பாய் ஒருவர் வந்துள்ளார். பொருட்களை கொடுத்த அவர், தனக்கு அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும், கழிவறையைப் பயன்படுத்த அனுமதிக்குமாறு கேட்டுள்ளார்.
இதனால், மனிதாபிமான அடிப்படையில் அந்தப் பெண்ணும் டெலிவரி பாயை தனது கழிவறையை பயன்படுத்த அனுமதித்துள்ளார். கழிவறைக்குச் சென்ற அந்த நபர், வெளியே வந்ததும் திடீரெனத் தனது ஆணுறுப்பைக் காட்டி அந்தப் பெண்ணிடம் மிகவும் அநாகரிகமான நடந்துள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த அந்தப்பெண், உடனடியாக அந்த நபரை வீட்டை விட்டு வெளியே கழுத்தைப் பிடித்துத் தள்ளியுள்ளார்.
இதனால் மிகுந்த மன வேதனை அடைந்த அந்தப் பெண், தான் சந்தித்த இந்த அநாகரிகக் கொடுமை குறித்துத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அழுது கொண்டே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், தங்களது வீட்டிற்கு வரும் அறிமுகமில்லாத நபர்களை எந்தவொரு காரணத்திற்காகவும் வீட்டிற்குள் அனுமதிக்காமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட ஆன்லைன் டெலிவரி நிறுவனம் மற்றும் பெங்களூரு சைபர் கிரைம் போலீஸார் அநாகரிகமாக நடந்துக்கொண்ட அந்த நபரைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Also Read: கறிவெட்டும் கத்தியால் மகனை துண்டுத்துண்டாக வெட்டிய தந்தை; விசாரணையில் வெளியான அதிர்ச்சி பின்னணி…



