நடுராத்திரியில் கையில் குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறிய அறந்தாங்கி நிஷா.. கேபிஒய் பழனி உடைத்த ரகசியம்!

WhatsApp Image 2026 07 15 at 1.30.42 PM

நகைச்சுவை மேடைகளில் தனது தனித்துவமான பேச்சாலும், வாழ்க்கை அனுபவங்களையும் நகைச்சுவையாக பகிரும் திறமையாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் அறந்தாங்கி நிஷா. இன்று விஜய் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் மூலம் பிரபலமான நடிகையாக திகழும் அவர், வாழ்க்கையில் பல சவால்களை கடந்து வந்திருப்பதாக நெருங்கிய நண்பரும் நகைச்சுவை கலைஞருமான கேபிஒய் பழனி பகிர்ந்துள்ள தகவல்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளன.


அண்மையில் அளித்த பேட்டியில் பேசிய பழனி, நிஷாவின் கணவர் வெளிநாட்டில் இருந்த காலத்தில், குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு கட்டத்தில் நிஷா, கையில் குழந்தையுடன் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக தெரிவித்தார். அப்போது தற்போதைய அளவுக்கு செல்போன் வசதிகளும் இல்லாத நிலையில், தகவல் அறிந்த அவரது தந்தை சொந்த ஊரிலிருந்து வந்து மகளை அழைத்துச் சென்றதாகவும், அந்தச் சம்பவம் குடும்பத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் கூறினார்.

மேலும், வெளிநாட்டில் நடைபெற்ற ஒரு கலை நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றபோது, நிஷாவுக்கு அம்மை நோய் ஏற்பட்டதாகவும், உடனடியாக நாடு திரும்ப முடியாத சூழ்நிலை உருவானதாகவும் பழனி தெரிவித்தார். அந்தக் காலகட்டத்தில் அவரிடம் ஒரே ஒரு நைட்டி மட்டுமே இருந்ததால், அதையே பயன்படுத்தி ஒரு வாரத்திற்கும் மேலாக அங்கு தங்கி சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளையும் கஷ்டங்களையும் கடந்து தான் நிஷா இன்று இந்த உயரத்தை அடைந்துள்ளார் என்றும், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இணைந்து பணியாற்றிய காலத்திலிருந்து இன்று வரை எந்த மாற்றமும் இல்லாமல் எளிமையாக பழகி வருபவர் என்றும் பழனி பாராட்டினார். பிரபலங்களின் வாழ்க்கையில் வெளியில் தெரியாத பல போராட்டங்கள் இருக்கும் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் இந்த அனுபவங்களை பகிர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். பழனி பகிர்ந்த இந்த தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகின்றன.

Also Read: பெற்றோர்களுக்கு எச்சரிக்கை.. முதல் தளத்தில் இருந்து தவறி விழுந்த 4 வயது சிறுமி.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!

Saranya

Next Post

பாலில் டிடர்ஜென்ட், யூரியா, பாம் ஆயில்… அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்திய மோசடி!

Wed Jul 15 , 2026
மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற சோதனையில், பொதுமக்களின் உடல்நலனை பெரிதும் பாதிக்கக்கூடிய வகையில் மிகப்பெரிய அளவில் கலப்பட பால் தயாரித்து விநியோகம் செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகள் தாராஷிவ் மாவட்டம், பூம் தாலுகாவில் நடத்திய ஆய்வின் போது இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் விற்பனைப் பதிவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், கடந்த ஆறு மாதங்களில் சுமார் 2,30,470 […]
Milk

You May Like