“நான் உன்னோட பொண்டாட்டிய லவ் பண்றேன்” செல்போன் மெசேஜால் அம்பலமான இன்ஸ்பெக்டரின் ரகசிய லீலைகள்!

2058065719ad5121b6783fe1ce5cb6c7

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் வசித்து வருபவர் 53 வயதான ஹரிஷ் மாதவ்ராவ் கட்டாவ்கர். துணை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் இவருக்கும், தனியார் பள்ளி ஆசிரியை ஒருவருக்கும் கடந்த 4 ஆண்டுகளாக பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில், மே மாதம் 2025-ல் ஹோட்டல் வேலை மற்றும் வீட்டின் இன்டீரியர் பணிகளை காட்டுவதாகக் கூறி அவர் ஆசிரியையை தனது வீட்டிற்க்கு அழைத்துள்ளார்.


இத்தனை நம்பிய ஆசிரியையும், அவருடன் சென்றுள்ளார். ஆனால் அங்கு அவர் ஆசிரியையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அன்று முதல் நீ என்னுடன் உல்லாசமாக இல்லாவிட்டால் உன் கணவனிடம் அனைத்தையும் சொல்லிவிடுவேன் என்று மிரட்டி பலமுறை ஆசிரியைக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில், தொடர்ச்சியாக ஆசிரியைக்கு வரும்  மெசேஜ்களை அவரது கணவர் கவனித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த ஆசிரியையின் கணவர், கட்டாவ்கருக்கு செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார்.

மேலும், நீ எனது மனைவியை தொந்தரவு செய்ய கூடாது என்று மிரட்டியுள்ளார். அப்போது கட்டாவ்கர், நான் உனது மனைவியை தான் காதலிக்குறேன் என்று கூறியுள்ளார். கடந்த புதன்கிழமை மாலை ஆசிரியையின் வீட்டிற்கு சென்ற கட்டாவ்கர், சையத் நிசார் என்பவரின் காரில் அவரை அழைத்துச் சென்று காருக்குள்ளேயே தாக்கியுள்ளார். பின்னர் இரவு 10 மணியளவில் ஆசிரியையின் மொபைலை பறித்துக்கொண்டு நடுரோட்டில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதையடுத்து, அந்தப் பெண் சம்பவம் தொடர்பாக  ஜவஹர்நகர் போலீசாருக்கு தகவல் தெரவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் ஹரிஷ் கட்டாவ்கர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருக்கும் கட்டாவ்கரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். 993ஆம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்த ஹரிஷ் கட்டாவ்கர் மீது இதற்கு முன்பும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாக எழுந்த குற்றச்சாட்டில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Also Read: “நான் வியந்து பார்த்த ஒரே ஸ்டார் அவர்தான்…” பிரபல நடிகை குறித்து குஷ்பூ பகிர்ந்த தகவல்.

Saranya

Next Post

"எனக்கு புருஷன் வேண்டாம்… அக்கா புருஷனே போதும்!" இளம்பெண்ணின் மோகத்தால் நடந்த அதிர்ச்சி சம்பவம்..

Mon Jul 20 , 2026
ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தின் ஜமுவா சோக் பகுதியைச் சேர்ந்த 20 வயதான நீரஜ். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஊர்மிளா என்ற பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஊர்மிளாவுக்கும் அவரது சகோதரியின் கணவரான சுபாஷ் பஸ்வானுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், தனக்கு திருமணம் நடந்துவிட்டால் தனது அக்கா கணவருடன் உல்லாசமாக இருக்க முடியாது என்று ஊர்மிளா […]
bafde12639db538f65e514502aaf7241 1

You May Like