கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.
அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.
இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக உய்ர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.150 உயர்ந்து ரூ.13,900-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ரூ.1,200 உயர்ந்து ரூ.1,11,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி, ஒரு கிராம் ரூ.250க்கும், ஒரு கிலோ ரூ.2,50,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.1,10,000-க்கும், ஒரு கிராம் ரூ.13,750-க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Read More : “அவமானத்தை நான் தாங்கிக் கொள்கிறேன்”..!! உதயநிதிக்கு பதிலடி கொடுத்த முதல்வர் விஜய்..!!



