ஆவின் பால் கொள்முதல் விலை உயர்கிறது? CM விஜய் நேரடி பரிசீலனை..!! சட்டசபையில் அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!!

Aavin 2026

தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்திற்கு பால் விநியோகம் செய்யும் பால் உற்பத்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை கருத்தில் கொண்டு, பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவது குறித்து தமிழக முதலமைச்சர் விஜய் தீவிரமாக பரிசீலித்து வருவதாக சட்டசபையில் அமைச்சர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.


சட்டப்பேரவையில் விவாதத்தின் போது பேசிய அவர், ஆவின் நிறுவனத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பால் வழங்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குறிப்பிட்டார். தீவனம் மற்றும் பராமரிப்புச் செலவுகள் அதிகரித்துள்ளதால், ஆவின் பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் எனப் பால் உற்பத்தியாளர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று, பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் கொள்முதல் விலையை உயர்த்தவது தொடர்பான சாத்தியக்கூறுகளை முதலமைச்சர் நேரடியாக ஆய்வு செய்து வருகிறார் என அமைச்சர் விஜயலட்சுமி தெரிவித்தார்.

Read More : விஜயின் 2-வது திருமணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த சங்கீதா..! வீட்டில் நடந்த ரகசிய பேச்சுவார்த்தை..!

Next Post

BREAKING | தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு..! நாளை தனித் தீர்மானம் கொண்டு வருகிறார் CM விஜய்..!

Tue Aug 11 , 2026
தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழகச் சட்டமன்றத்தில் நாளை தனித் தீர்மானம் கொண்டு வரப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு மேற்கொள்ள திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக, தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை முதலமைச்சர் விஜய் கூட்டியிருந்தார். அக்கூட்டத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட கருத்துகள் மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், தொகுதி மறுவரையறை […]
cm vijay speech

You May Like