முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை புத்தகத்தை டெல்லியில் பிரதமர் மோடி வெளியிட்டார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றும்போது, ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை புத்தகம், இந்திய ஜனநாயகத்தின் பாரம்பரிய அடையாளமாக மாறும் எனக்கூறினார்.
இளைய தலைமுறையினர் இந்த புத்தகத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. இது ரீல்ஸ் காலம். சோஷியல் மீடியா பிரபலங்கள் இளைஞர்களை வேறு திசையில் ஈர்க்ககூடும். குறுக்கு வழியில் செல்ல நினைப்பவர்கள், ரயில் நிலையங்களில் எழுதப்பட்டு இருக்கும் இந்த வாசகத்தை நினைவில் கொள்ளுங்கள்; ‘குறுக்கு வழிகள் உங்கள் வாழ்வை குறுக்கிவிடும்.
இளைஞர்கள் தங்களுக்கு பிடித்தமானவர்களின் சுயசரிதையை படியுங்கள். மற்றவர்களின் போராட்டங்களில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்த பின்னரும், ராம்நாத் கோவிந்த் ஓய்வு எடுக்கவில்லை. இந்திய ஜனநாயகத்தில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு பணியாற்றி வருகிறார்.
எதிர்காலத்தில் அவரை போன்ற இளைஞர்கள் நமக்கு தேவை. சூழ்நிலைகளை கண்டு துவண்டு போகாமல் ஒவ்வொரு சவாலையும் வெல்லும் உறுதியை இளைஞர்கள் கொண்டிருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
Read More : SBI-யில் 9,766 கிளார்க் வேலைவாய்ப்பு… மாதம் ரூ.39,000 சம்பளம்! பட்டதாரிகளுக்கு சூப்பர் சான்ஸ்!



